அண்மை செய்தி தாயகச் செய்தி 

காணிவிடு விப்பிற்காக போராடும் கேப்பாப்பிலவு மக்களை பாாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திக்க வேண்டும்; ரவிகரன்

காணிவிடுவிப்பிற்காக போராடும் கேப்பாப்பிலவு மக்களை பாாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திக்க வேண்டும்; ரவிகரன் எம்.பி கோரிக்கை தமது பூர்வீக காணிவிடுவிப்பிற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நேரில் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 16.07.2026ஆம் திகதியன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள சூழலிலேயே பாராளுமன்ற உறுப்பினரால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றில் 08.07.2026இன்று உரைமாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார் இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி இன்றோடு 15ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணி விடுவிப்பை வலியுறுத்தி அந்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கிண்ணியாவில் சட்டவிரோத மண் அகழ்வு: 12 சாரதிகள் கைது, 12 வாகனங்கள் பறிமுதல்!

கிண்ணியா, உப்பாற்றுக் கங்கை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட 12 சாரதிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மண் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (07) இரவு வேளையில் விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் எவ்வித அனுமதியும் இன்றி, சட்டவிரோதமான முறையில் இவர்கள் மண் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 7 டிப்பர் வாகனங்களும்,05 உழவு இயந்திரங்களும் 05 கைப்பற்றப்பட்டன. அனைத்து வாகனங்களும் மண் ஏற்றப்பட்ட நிலையிலேயே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 12 சாரதிகளும் கிண்ணியா பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்றைய தினம் (08) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய – பிரதான பாதையை திறக்க நடவடிக்கை

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். பாதுகாப்பு காரணங்களால் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிரதான பாதையை, ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திறந்து வைப்பது குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டது. இதன் விளைவாக, ஆலயத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் வினவிய – ரவிகரன்

கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் வினவிய – ரவிகரன் எம்.பி; சாத்தியப்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு முல்லைத்தீவிற்கு வருகைதரவுள்ளதாக வீதிஅபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் பதில் கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதுதொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைகளை பரிசீலிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இதன்போது பதிலளித்துள்ளார். பாராளுமன்றக்குழு அறையில் 07.07.2026இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 21.05.2026அன்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல்

சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேற்று  மாலை இடம்பெற்றது. இந்த சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு ஒரு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது. இதில் சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 1990.07.07 அன்று சம்பூர் பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 57 பொதுமக்கள் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பி லிருந்து ராணுவப் பாதுகாப்புடன். மட்டு. சிறைச்சாலைக்கு 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம் விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைத்துள்ளதுடன் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு 63 பேர் கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்குள் இடம் பெற்ற மோதலையடுத்து சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதுமையுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்த 60 கைதிகளை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து சிறைச்சாலை பகுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை 400 கைதிகள் பராமரிக்க கூடிய மட்டக்களப்பு சிறைச்சாலையில் 960 கைதிகள் பல இடநெருக்கடிகளுக்குள் இருந்து வரும் நிலையில் மேலும் நீர்கொழும்பு சிறையில் இருந்து 60 கைதிகள் கொண்டு வரப்பட்டதையடுத்து…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிண்ணியாவில் மயானப் பிரச்சினையை முன்வைத்து பொதுமக்கள் போராட்டம்!

கிண்ணியா நகர சபை பிரிவுக்குட்பட்ட சின்னத் தோட்டப் பிரதேச மக்களின் இந்து மயானப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் இன்று தங்களின் வேலைநிறுத்த மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை – கிண்ணியா நகர சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சின்னத் தோட்டம் பகுதியில் கழிவு முகாமைத்துவத் தளம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தளத்தை உடனடியாக அவ்விடத்திலிருந்து அகற்றக் கோரியும், குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுமே சின்னத் தோட்ட மக்கள், இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு தொடர்ச்சியாகக் கழிவுகள் கொட்டப்படுவதனால், அருகில் உள்ள இந்து மயானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றம் மற்றும் குப்பைகளின் விசிறல் காரணமாகவும், கழிவுகளால் கவரப்பட்டு வரும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தித்வா புயலால் பாதிக்கப் பட்ட பாடசாலை களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; ரவிகரன் எம்.பி

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி மன்னார் – மடுகல்வி வலயத்தில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சீர்செய்வதற்குரிய, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மடு வலயக்கல்விப் பணிப்பாளர், அவ்வாறு இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ள பாடசாலைகளின் பாதிப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் விரைவில் வழங்கப்படுமென வடமாகாண கல்வித்திணைக்களம் தமக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தித்வா புயலால் மடு கல்வி வலயத்தின், மாந்தை மேற்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெளிக்குளத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்: துரத்திப் பிடித்த இளைஞர்கள்

வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட வெளிக்குளம் பகுதியில், நேற்றயதினம்  இரவு டிப்பர் வாகனம் ஒன்றின் மூலம் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட கட்டிட இடிபாட்டுக் குப்பைகள் மற்றும் மரக்கழிவுகள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினரின் துரித நடவடிக்கையால் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. வெளிக்குளம் பகுதி வயல் கரையோரங்களைச் சூழவுள்ள இயற்கையான சூழலில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு டிப்பர் வாகனம் மூலம் பெருமளவிலான கட்டிட இடிபாட்டுக் குப்பைகளும் மரக்கழிவுகளும் கொட்டப்பட்டன. இதனை அவதானித்த அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் உடனடியாகச் செயற்பட்டு, குப்பைகளைக் கொட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற டிப்பர் வாகனத்தை சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர் இது குறித்து வவுனியா மாநகர சபை உறுப்பினர் அருணனுக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர சபை உறுப்பினர் அருணன், சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களைக் கடுமையாக எச்சரித்தார்.…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

07 அதிகாரிகள் உட்பட 27 பேரை பலியெடுத்த சிறை மோதல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி,  07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை  நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிமல் ஜி. புஞ்சிஹேவா…

மேலும் படிக்க