தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்

மட்டக்களப்பு – வாழைச்சேணை பகுதியில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு 750,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் கடந்த ஜூன் 4ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இந்த முறைகேடு கண்டறியப்பட்டது. இதன்போது, அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தல், குறித்த உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.இதனைத் தொடர்ந்து உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தமை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

திருமலையில் விபத்து – பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்!

திருகோணமலையில் இன்று (11) காலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் பலத்த  காயமடைந்துள்ளார். துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுற்றுவட்டப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேருந்தின் பின்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதுடன் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (11) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி, தற்போது வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றத்திற்குச் சொந்தமான காணி மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் உள்ளிட்ட பகுதிகள் இராணுவம் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்ச வீடு பகுதியையும் விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து இராணுவம் மற்றும் கடற்படையினர் வெளியேற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு

வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால்(அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும் அதனை கடந்த28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்ததவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார்  ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். விபத்தையடுத்து, கார்  சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில்  காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1700போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது. குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றிவிசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இந்தியா செல்ல முயன்ற 13 பேர் திருப்பி அனுப்பப்பட்டு கைது

கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட 13 பேர், இந்திய சுங்க அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்ற குறித்த 13 பேர் தொடர்பில் இந்திய சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன்போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவர்களை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்ப இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கைக்கு திரும்பிய 13 பேரையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கருங்கொடித்தீவு, மாம்பிட்டி, மதவாச்சி, ஹல்தும்முல்லை, வெல்லவாய, மொணராகலை, மாவடிச்சேனை, பலாங்கொடை, திருகோணமலை, பதுளை மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா சென்ற கார் விபத்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா சென்ற கார் விபத்து!– அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர் யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நேற்று (02) பிற்பகல் 2.00 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஷெனன் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வீதியை விட்டு விலகி, தொலைபேசி இணைப்புக் கம்பமொன்றையும் உடைத்துக்கொண்டு, ஹட்டன் ஓயாவை நோக்கி நீர் செல்லும் கால்வாயொன்றில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்றபோது காரில் மூவர் பயணித்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பு ஆசனப்பட்டிகளை அணிந்திருந்ததால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், விபத்தில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஹட்டன் பொலிஸ்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு;

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்ற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு 30.08.2026நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு நிகழ்வானது, விருந்தினர்கள் மற்றும் சாதனையாளர் வரவேற்புடன் ஆரம்பமானது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், விருந்தினர்களது உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், புதுக்குடியிருப்பு பங்கிற்குட்பட்ட சாதனையாளர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் செபஸ்தி அருள்ராஜ்குமார், வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.மதிவதனி,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் விகாரைக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். குருந்தூர் விகாரை வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், பக்தர்கள், தொல்பொருள் தளம் மற்றும் அங்குள்ள தொல்பொருட்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதால், குருந்தூர் விகாரை அமைந்துள்ள தொல்லியல் பகுதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் அங்கு பணியாற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், விகாரைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குருந்தூர் விகாரையின் பாதுகாப்புக்காக…

மேலும் படிக்க