தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு,: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் பலி: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டு மூன்று நாட்களாகியும் இதுவரையில் கர்நாடகா அரசின் சார்பில் உரிய நீதி விசாரணையோ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் கர்நாடக அரசின் போக்குவரத்துக் கழக பேருந்தை சிறைபிடித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் உயிரிழந்த தமிழர்களுக்கு நீதி கேட்டு போராட்டம். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் (அனூர்) தாலுகாவில் அமைந்துள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தப் பகுதியில் வசித்து வந்த ஆண்டனி சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42) மற்றும் குமார் (35) ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்தனர். மேலும்…

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம் புதுடெல்லி செல்லவுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். அவரின் ஆலோசனையின் பிரகாரம் அடுத்த வாரம் புதுடெல்லி சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோரை சந்தித்து, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளோம். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்மீண்டும் உறுதியாக கூறிய பழ. நெடுமாறன்

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் மீண்டும் உறுதியாக கூறிய பழ. நெடுமாறன் தஞ்சாவூர், ஜூலை 23– தஞ்சாவூரில் இன்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நூற்றாண்டு விழா தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்ற முது முனைவர் வ.அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்படி உள்ளது என்பது குறித்து ஓராண்டுக்கு பிறகு கருத்து கூறுவது தான் சரியாக இருக்கும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றியதை வரவேற்கிறோம். நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் ஜனநாயகன் படம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்.

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (வயது 88) இன்று காலமானார். தனது மந்திர குரலால் கோடிக்கணக்கான மனங்களை வசப்படுத்தியிருந்த அவர், இன்று காலமானார். ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். 1938ம் ஆண்டு ஆந்திராவின் பல்லேபட்லா கிராமத்தில் ஏப்ரல் 23 அன்று பிறந்தார். 19 வயதிலேயே இவர் சினிமா துறைக்குள் நுழைந்துவிட்டார். 1957ல் வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் என முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து மறக்க முடியாத பாடல்களை கொடுத்திருக்கிறார். இவர் 4 முறை சிறந்த பின்னணி பாடகி என்று தேசிய விருதுகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

தமிழக முதலமைச்சர் விஜய் – இலங்கை துணை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜயை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த  உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக பேசினார். இரு நாடுகளின் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தும் வழிகள், கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான நட்புறவு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் பிரதி  உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு (ஜூன் 27) காலமானார்

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று (ஜூன் 27) காலை காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பாக்யராஜ். இவர், 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு தான் சென்னை திரும்பி உள்ளார் பாக்யராஜ். இன்று காலையில் வழக்கம் போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூற உடனடியாக அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் உள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய பாடகர் சத்தியன்

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தினால் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (21) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களையும் இடங்களையும் பார்வையிட்டார். அதன் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் சென்ற சத்தியன், யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தனது அஞ்சலியைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.விஜய், சங்கீதா ஆகியோர் முன்னிலையாகாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் – சங்கீதா ஆகியோர் 2021 இல் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி.

இயக்குனர் இமயம் பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி. இந்திய அரசு வழங்கிய “பத்மபூஷன்” எனும் விருதை விட என் தமிழீழ மக்களின் விடுதலையே எனக்கு முதன்மையானது என்று கூறி பத்மபூஷன் விருதை உதற எறிந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழீழம் சென்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து உறவாடித் திரும்பியவர் பாரதிராஜா. பாரதிராஜா அவர்கள் மீது அளவற்ற பெருமதிப்பை வைத்திருந்தார் தலைவர் பிரபாகரன். இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழீழ விடுதலை போராட்டம் குறித்த திரைக்கலை படைப்பொன்று உருவாக்க பாரதிராஜா அவர்கள் திட்டமிட்டிருந்தும் அவருடைய அந்த கனவு நிறைவேறாமல் போனது உலகத் தமிழர் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பேரிழப்பாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்கின்றது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

தமிழ் திரையுலகிற்கு மண்வாசனையையும், எதார்த்தத்தையும் கொண்டு வந்து புரட்சி செய்த மாபெரும் கலைஞன், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூன் 10, 2026) அதிகாலை சென்னையில் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும், திரையுலகையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் ஸ்டுடியோக்கள் சார்ந்த நிலையை மாற்றி, கேமராக்களை கிராமத்து மண்ணை நோக்கித் திருப்பியவர். “என் இனிய தமிழ் மக்களே…” என்ற அவரது கம்பீரக் குரலும், ’16 வயதினிலே’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற காலத்தால் அழியாத காவியப் படைப்புகளும் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பாகும். மாபெரும் கலை ஆளுமைக்குத் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத்…

மேலும் படிக்க