.விவசாயிகளிட மிருந்து துரிதகதியில் நெற்கொள் வனவை மேற்கொள் ளுமாறு ரவிகரன் வலியுறுத்து;
விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து; முல்லைத்தீவில் 15ஆம்திகதி நெற்கொள்வனவு
விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து; முல்லைத்தீவில் 15ஆம்திகதி நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென நெல் சந்தைப்படுத்தல்சபை பதில்
விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் சிறுபோக நெல்கொள்வனவை ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன், எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.
கடந்த 08.07.2026அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.
அதன்போது இம்மாதம் 13ஆம் திகதி நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமேன உரிய அதிகாரிகளால் பதிலளிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு உரிய அதிகாரிகளால் பாராளுமன்ற உறுப்பினருக்கு பதில் வழங்கப்பட்டிருந்தபோதும் 13.07.2026இன்று நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகளால் இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் உடனடியாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நெற்கொள்வனவு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போதே அவரால் மேற்கண்டவாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் இதன்போது மேலும் பதிலளிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல்மாதிரிகள் பெறப்பட்டு, நெல்லினுடைய ஈரப்பதனை ஆய்வுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொள்வனவு செய்வதற்கு ஏற்றவகையிலான ஈரப்பதனுடைய நெல்மாதிரிகளை வைத்திருக்கும் விவசாயிகள் தெரிவுசெய்யப்பட்டு, அந்த விவசாயிகளுக்கு நெல்கொள்வனவிற்கான படிவங்கள் வழங்கப்படுகின்ற செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அத்தோடு ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்டு களஞ்சியசாலைகளில் தேங்கியிருக்கின்ற நெல்லை, உரிய வகையில் அகற்றுகின்ற செயற்பாடுகளும் துரிதகதியில் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில் ஏற்கனவே கடந்த போகங்களின்போது விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்யப்பட்டு, முள்ளியவளை களஞ்சியசாலையில் தேக்கிவைக்கப்பட்டிருந்த நெல் அண்மையில் உரியவகையில் சதோசவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் முறிப்பு பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் தேக்கிவைக்கப்பட்டிருந்த நெல்லும் 13.07.2026இன்று சதோசவிற்கு வழங்கப்பட்டுவருகின்றது.
அதேபோல் ஒலுமடு, மாங்குளம், ஒட்டுசுட்டான் பகுதிகளிலுள்ள விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்து தேக்கிவைப்பதற்கு, வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள கனகராயன்குளம் பகுதியில் களஞ்சியசாலை ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இதனைவிட துணுக்காய் பிரதேசத்திலும் களஞ்சியசாலை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சுதந்திரபுரம் பகுதியிலும் களஞ்சியசாலை நெல் கொள்வனவுற்கு ஏற்றவாறு தயாரான நிலையில் காணப்படுகின்றது.
அந்தவகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விவசாயிகளிடமிருந்து நெற் கொள்வனவை மேற்கொள்ளவதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமெனவுந் தெரிவித்தார்.
இந்நிலையில் உரிய நடமுறைகளைப்பின்பற்றி, விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகாதவாறு துரிதகதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
அத்தோடு கடந்த 08.07.2026அன்று இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதற்கமைய ஜூலை 13ஆம் திகதி விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படாமை தொடர்பில் உரிய அமைச்சு மட்டத்திற்குத் தம்மால் தெரியப்படுத்தப்படுமெனவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரால் தெரியப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பிக்கப்படுமென நெல் சந்தைப்படுத்தல்சபை பதில்