தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்

மட்டக்களப்பு – வாழைச்சேணை பகுதியில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு 750,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் கடந்த ஜூன் 4ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இந்த முறைகேடு கண்டறியப்பட்டது. இதன்போது, அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தல், குறித்த உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.இதனைத் தொடர்ந்து உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தமை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

திருமலையில் விபத்து – பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்!

திருகோணமலையில் இன்று (11) காலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் பலத்த  காயமடைந்துள்ளார். துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுற்றுவட்டப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேருந்தின் பின்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதுடன் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (11) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி, தற்போது வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றத்திற்குச் சொந்தமான காணி மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் உள்ளிட்ட பகுதிகள் இராணுவம் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்ச வீடு பகுதியையும் விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து இராணுவம் மற்றும் கடற்படையினர் வெளியேற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார். கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு

வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால்(அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும் அதனை கடந்த28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்ததவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார்  ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். விபத்தையடுத்து, கார்  சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டைனமைட் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள்அழிப்பு

டைனமைட் உள்ளிட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த சம்பவம் தொடர்பில், 200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகையுடன் படகொன்றும் சந்தேகநபர் ஒருவரும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீன் தொகுதி தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் இணைந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த மீன் தொகுதி மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைனமைட் அல்லது ஏனைய வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது இலங்கையில் சட்டவிரோதமான செயற்பாடாகும். இவ்வாறான முறைகள் ஒரே நேரத்தில் அதிகளவிலான மீன்களை அழிப்பதுடன், சிறிய மீன்கள் உள்ளிட்ட ஏனைய கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீன் தொகுதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அதனை மனித நுகர்வுக்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில்  காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1700போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது. குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றிவிசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

புதிய வாகனங்க ளுக்கான இலக்கத் தகடுகள் இனி ஒரு வாரத்துக்குள்!

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள், வாகனம் பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.இந்த ஆண்டு ஜூன் 10ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இனிவரும் காலங்களில், இலக்கத் தகடுகளை தாமதமின்றி வழங்கும் வகையில் நடைமுறைகள் மேலும் சீரமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளன. கார்கள், SUV வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் முன்புறம் மற்றும்…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கைக்கு வரவுள்ளார். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினரும் அவருடன் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையொப்பமிடப்பட்ட இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இந்த…

மேலும் படிக்க