தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இராணுவ முகாமுக்கு முன் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (05.06.2026) 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்று (05) காலை கேப்பாபுலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

படகுத்துறையில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மீனவ வாடிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

படகுத்துறையில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மீனவ வாடிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்குரிய கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது வலியுறுத்தலையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த வாடிகளை விடுவிப்பதுதொடர்பில் கடற்படையினருக்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் – மாந்தை மேற்கு, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.07.2026நேற்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், படகுத்துறைப் பகுதி மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 18.06.2026அன்று அப்பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன்போது தமது கடலுணவுக்…

மேலும் படிக்க