இலங்கை செய்தி. 

6 கிலோ குஷ் போதைப் பொருளுடன் வெளிநாட்டவர் கைது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 6 கிலோ 180 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 63 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ​​இன்று (14) அதிகாலை வேளையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​தொம்பே – பரங்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் ‘கிறிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்’ (Ice) போதைப்பொருளுடன் 23 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டார். கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் STF-இன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (13) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 69,951 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கடந்த 12 ஆம் திகதி வரை பதிவாகியிருந்த மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆகும் என்பதுடன், நேற்று (13) ஒரு நாளில் மாத்திரம் 1,279 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 33,127 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 14,464 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 14,004 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 13…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

ட்ரோன்’ பறக்க விட்டவர் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ‘ட்ரோன்’ பறந்தமையால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பதற்றம் ஏற்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத ‘ட்ரோன்’ ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டது. ‘ட்ரோனை’ அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதேநேரம் இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு  சிறை பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டது. இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ‘ட்ரோன்’ அது எனக் கண்டறியப்பட்டது. பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

நீர்கொழும்பு வன்முறை மோதலில் மேலும் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்து ள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் (13) மற்றும் நேற்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு அதிகாரிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே 21 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்த நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மோதலில் காயமடைந்த சில சிறைக்கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் தொடர்ந்து சிகிச்சை…

மேலும் படிக்க