தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடொன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த அலஸ்கிறின் (வயது 60) என்ற தாயாரும், அவரது மகனான அயந்தன் (வயது 35) என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் தாயும் அவரது மகனும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், உறவினர்கள் இருவர் மாலையில் குறித்த வீட்டிற்குச் சென்றபோது, தாய் இரத்த காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார். .இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ்நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற குற்றத் தடுப்புப் பொலிஸார், தடவியல் காவல்துறையினரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று (20.09) வருகை தந்த பதில் நீதவான் த. ஆர்த்தி சடலங்களை நேரில் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அன்மைச் செய்தி

Leave a Comment