தாயகச் செய்தி 

.விவசாயிகளிட மிருந்து துரிதகதியில் நெற்கொள் வனவை மேற்கொள் ளுமாறு ரவிகரன் வலியுறுத்து;

விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து; முல்லைத்தீவில் 15ஆம்திகதி நெற்கொள்வனவு விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து; முல்லைத்தீவில் 15ஆம்திகதி நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென நெல் சந்தைப்படுத்தல்சபை பதில் விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் சிறுபோக நெல்கொள்வனவை ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன், எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுமெனவும் தெரிவித்தார். கடந்த 08.07.2026அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் நெற்கொள்வனவை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஆயுதக் கிடங்கான சிறைச்சாலை சமையலறை! – சந்தேகநபர்கள் அடையாளம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது. போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, தலா 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்று…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழ். பல்கலையில் ‘நீதம்’ சட்ட இதழ் வெளியீடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த ‘நீதம்’ சட்ட இதழின் வெளியீட்டு விழா, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் சனிக்கிழமை (11) நடைபெற்றது. இந் நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் சம்பத் அபேயகோன் பிரதம விருந்தினராகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் கௌரவ விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி நாயகம் சுஹர்ஷி ஹேரத்தும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

கொழும்பு பல்கலைக்கழக நடவடிக்கைகள் இணைய வழியில்

நாட்டில் நிலவும் டெங்கு நோய் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் முதல் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும், எனினும், பல்கலைக்கழகத்தை மூடுவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக விடுதிகள் அனைத்தும் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடம், சட்ட பீடம், கல்வி பீடம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஜூலை 09 முதல் ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை எச்சரிக்கை

நாட்டின் ஆறு மாவட்டங்களில் நிலவவுள்ள அதிக வெப்பநிலை குறித்து முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளது. மனித உடலால் உணரப்படும் அளவில் இம்மாவட்டங்களில் வெப்பநிலை, உச்சந்தொடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவில் நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன வீட்டிலுள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தம்படியும் திணைக்களம் கேட்டுள்ளது.அதேவேளை, சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியீடு

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் பல்கலைக்கழக அனுமதிக்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.இவ்விண்ணப்பங்கள், பரிசீலிக்கப்பட்ட பின்னர், 42,937 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் புதிய பட்டப்படிப்பு பாடநெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மாணவர்களின் பாதுகாப்புக்கு அதிரடி முடிவு – முழுக் கை, முழுக் கால் ஆடைக்கு அனுமதி

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக, பள்ளி மாணவர்கள் கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிய கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை டெங்கு கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பதே இந்த புதிய நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்கென, தற்போதுள்ள பள்ளிச் சீருடையுடன் கூடுதலாக, மாணவர்களின் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெங்கு பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் கொசு விரட்டிகளை (Mosquito Repellents) மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வையும், கல்வியையும் வழங்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியத்தையும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவனைக்காக கையளிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் மற்றும் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கற்பக பிள்ளையார் கோவில் வீதியானது 1.5 நீளமான வீதியாகும். இதன் புனரமைப்பு பணி 74.5 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க