உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஜப்பானில் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழந்துள்ளனர்

தென்மேற்கு ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவில் உள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தின் அளவு: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து 6.1 ரிக்டர் அளவில் பின்னதிர்வும் ஏற்பட்டது. உயிரிழப்பு மற்றும் காயம்: ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி (Sanae Takaichi) அளித்த தகவலின்படி, இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகள்: குமாமோட்டோ, நாகசாகி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள் சேதம்: காஷிமா (Kashima) பகுதியில் உள்ள பிரபல ‘இயான் மால்’ (Aeon Mall) வணிக வளாகத்தின் இரண்டாவது தளம் இடிந்து விழுந்தது. யட்சுஷிரோ நகரில் உள்ள காகித ஆலையின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கீரிமலை – மாவிட்டபுரம் பகுதிகள் குப்பைக் கிடங்காகும் அபாயம்;

யாழ்ப்பாணத்தின் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகள் எதிர்காலத்தில் பாரிய குப்பைக் கிடங்காக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளிட்ட முக்கியமான ஆலயங்களை அண்மித்த பகுதிகளில், குறிப்பாக மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியை அண்மித்துள்ள பாரிய குழிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் குறித்த பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக பாரிய குழிகள் உருவாகியுள்ளன. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள்…

மேலும் படிக்க