கரும்புலிகள் நாள் ஜூலை 5-
கரும்புலிகள் நாள் ஜூலை 5- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5-ஆம் நாள் ஈழத் தமிழர்களால் கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொடைப் பிரிவான கரும்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதலை 1987-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் திகதி. கப்டன் மில்லர் (வல்லிபுரம் வசந்தன்) நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவ முகாம் மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி முதன் முதலாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் நடந்த ஜூலை 5-ஆம் நாளை, விடுதலைப் புலிகள் இயக்கம் “கரும்புலிகள் நாள்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஆண்டு தோறும் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களால் இந்நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க