இலங்கை செய்தி. 

கொழும்பு பல்கலைக்கழக நடவடிக்கைகள் இணைய வழியில்

நாட்டில் நிலவும் டெங்கு நோய் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் முதல் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும், எனினும், பல்கலைக்கழகத்தை மூடுவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக விடுதிகள் அனைத்தும் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடம், சட்ட பீடம், கல்வி பீடம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஜூலை 09 முதல் ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவெளை இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலக்கழகத்தை மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment