அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஜூலை 20 முதல் செப்டெம்பர் வரை “எல் நினோ” கடுமை யாகத் தாக்கும் – பேராசிரியர் பிரதீப ராஜா

பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள “எல் நினோ” இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மிகக் கடுமையாகத் தாக்கும் என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கமக்காரர் அமைப்பு மற்றும்  மீனவசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ தொடர்பான கலந்துரையாடல்  கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஏற்படப்போகும் எல்நினோ நிலையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் K.அழகக்கோன், பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தின் இணைப்பாளர் வல்லிபுரம் வாசுகி, கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவசங்க பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் ஒன்பது நாளை எட்டியது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியே தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 59.5 ஏக்கர் காணிகள் பூர்வீக மக்களுக்குச் சொந்தமானவை என்றும், தற்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ நிலைகளை அருகிலுள்ள மாற்று நிலங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறே தாங்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இராணுவ முகாம்களை மாற்றி அமைத்து, பூர்வீக மக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்க…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை – புதுக்குடியி ருப்பில்.78 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர்.கைது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் 78 கிலோகிராம் கேரள கஞ்சா  கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  அதில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 31 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கட்டுகுருந்த பகுதியில் கோர விபத்தில் பாட்டி, பேரன் பலி

காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டியும், அவரது 12 வயது பேரனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (01) நள்ளிரவு சுமார் 12.00 மணியளவில் தனியார் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருவளையில் நடைபெற்ற பொசன் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த 62 வயதுடைய பெண்ணும், அவரது 12 வயது பேரனும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் தாத்தாவே முச்சக்கரவண்டியை செலுத்தியிருந்தார். அவர் பலத்த காயங்களுடன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.…

மேலும் படிக்க