புலச் செய்திகள் பொதுவான செய்திகள் 

பிரித்தானிய அரசில் முதல் தமிழ் பெண் இராஜாங்க அமைச்சர்; உமா குமரன்

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதன் மூலம், பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை உமா குமரன் படைத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அமைச்சுப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “எனது…

மேலும் படிக்க
புலச் செய்திகள் பொதுவான செய்திகள் 

இறுதிப் போரில் பணியாற்றிய வைத்திய அதிகாரி வரதராஜா!அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இறுதிப் போரில் பணியாற்றிய வைத்திய அதிகாரி வரதராஜா! வன்னியில் இறுதிப் போரில் மக்களுடன் இறுதிவரை நின்று பணியாற்றிய வைத்தியர் வரதராஜா கடுமையான உடல் நிலைப்பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்து கனடாவின் ரொறொன்டோவில் வசித்துவரும் வைத்தியர் வரதராஜா சில நாட்களுக்கு முன்னர் கடுமையான இருதயப் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் வைத்தியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய கணவர், கடுமையான இருதயப் பிரச்சினையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்காக பிரார்த்திக்குமாறும் அவருடைய மனைவி முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இறுதிப்போரில் வாகரையிலும் பின்னர் வன்னியிலும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியர் வரதாஜா மே மாதம் 15 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் படுகாயம் அடைந்திருத்தார். பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

துவாரகா என கையெழுத்திடப்பட்ட. துண்டறிக்கை, வைரல்.!

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் 03.06.2026 உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தொடர்பான அறிவிப்பு அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, தமிழீழ மக்களின் பன்னாட்டு அரசியல், பொருளாதார, சமூக மற்றும் இராசதந்திர தேவைகளை முன்னிறுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) எனும் கட்டமைப்பு, 2009 ஆம் ஆண்டு வரை புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டு வந்தது. அதன் பின்னரும் சில நாடுகளில், குறிப்பாக சுவிசைத் தளமாகக் கொண்டு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது தலைமைச் செயலகத்தின் நெறிப்படுத்தலின் கீழ், அமைப்பு சார்ந்த கட்டமைப்புகளும் அரசியல் பணிகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற நேரடியான பெயரின் கீழ் மீளமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டமைப்புகளும் தேசியத் தலைவரின் சீரிய சிந்தனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் செப்பனிடப்பட்டு வருகின்றன.…

மேலும் படிக்க
அண்மை செய்தி புலச் செய்திகள் 

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு 2026

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு 2026 *********************************** சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் சூரிச் சிவன் ஆலய சைவத்தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடாத்தும் “அற்றார் அழிபசி தீர்த்தல்” நிகழ்வும் தாயக உணவுக் கண்காட்சியும் பத்தாவது ஆண்டில் பெருந்திரளான மக்கள் மத்தியில் கடந்த 26.04.2026 ஞாயிற்றுக்கிழமையன்று Sporthalle Unterrohr Schlieren Unterrohrstrasse 2 8952 Schlieren எனும் இடத்தில் சைவத்தமிழ்ச் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சி.இராதாகிருஷ்ணன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆசியுரையினை சூரிச் சிவன் ஆலய பிரதமகுரு கைலாசநாதக்குருக்கள் நிகழ்த்த அதனைத் தொடர்ந்து நடன நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து கருத்துரைகளை சைவத்தமிழ்ச் சங்க செயலாளர் திரு.செ.சிறிஸ்கந்தவேள், சைவத்தமிழ்ச் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சி.இராதாகிருஷ்ணன் என பலர் ஆற்றியதோடு இசை நிகழ்வுகள், நாடக ஆற்றுகைகள், எனப் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

கனடாவில் வரலாறு படைத்த தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாள்!

கனடாவில் வரலாறு படைத்த தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாள்! கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழினப் படுகொலை நினைவகம் (Tamil Genocide Monument) திறக்கப்பட்டு நேற்றுடன் (மே 11, 2026) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி, சிங்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் இந்த நினைவகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் பூர்வீக தாயகமான தமிழீழத்தின் வரைபடம் மற்றும் வடக்கு-கிழக்கின் ஒன்பது மாவட்டங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்களுடன் 4.8 மீட்டர் உயரத்தில் இந்த நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணி: 2021-இல் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்குப் பதிலடியாக, பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) தலைமையிலான மாநகராட்சி இந்த நினைவகத்தை அமைப்பதாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

சுவிற்சர்லாந்து பேர்ன் மாநகரில் “வைரக்குடுவை” நூல் அறிமுக விழா – 2026

சுவிற்சர்லாந்து பேர்ன் மாநகரில் “வைரக்குடுவை” நூல் அறிமுக விழா – 2026 ****************************** யாழ்/உரும்பையூர் து.திலக் (கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து வீரகேசரி வார வெளியீட்டில் வாரந்தோறும் எழுதிய படைப்பாளர் பார்வை “வைரக்குடுவை” தொகுதி 01, ஆளுமைகள் 25 நூல் அறிமுகவிழா கடந்த 09.05.2026 சனிக்கிழமையன்று சுவிற்சர்லாந்து Eropaplatz B1, 3008 Bern எனும் இடத்தில் தாயக அறிவிப்பாளர் ஜனனி கார்த்திகேசு தலைமையில் தமிழர் களறி ஆவணக்காப்பக வெளியீடாக அறிமுகமானது…… இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கினை பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருச்சுனையர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுத சுவிகள் ஆலயம் சார்பாக சோமசுந்தரம் விநாயகமூர்த்தி, ஈழத்தின் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார், நூலாசிரியரின் உறவினர் நாகலிங்கம் மகேஸ்வரன், செங்காளன் மாநிலத்திலிருந்து வருகை தந்த சமூக ஆர்வலர் திரு.வீரகத்தி சிவராசா, ராதா நடனாலய அதிபர் முதுகலைமாணி திருமதி.ஞானசுந்தரி வாசன்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி புலச் செய்திகள் 

மத்திய கிழக்கு போரில் கொல்ல ப்பட்ட அமெரிக்க தமிழ் இராணுவ வீரர்

மத்திய கிழக்கு போரில் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்ற தமிழ் இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளார். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது.இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தில் இணைந்த விசாகன் சத்தியமூர்த்தி கடந்த 21 ஆம் திகதி மத்திய கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி கிரியைகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United States என்ற முகவரியில் அமைந்துள்ள Los Angels National Cemetory யில் நடைபெறவுள்ளதாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. புலச் செய்திகள் 

இத்தாலியில் பணி யாற்றிய இலங்கை வம்சாவளி பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

இத்தாலிய பொலிஸ் துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை வம்சாவளி அதிகாரியான  27 வயதுடைய  ஷெஹான் பெர்னாண்டோ , மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வென்னப்புவ, தல்டேனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷெஹான், மிலனில் உள்ள தனது தங்குமிடத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக இத்தாலிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது உடலுக்கு அருகிலேயே அவரது பணித் துப்பாக்கியும் (Service Weapon) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் ஒரு தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து இத்தாலிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதம்

கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் மற்றும் கனடியத் தமிழர் தேசிய அவை கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி அதிகாலையில் இந்த நினைவுச்சின்னத்தின் பிரதான மேடை மற்றும் நினைவுப் பலகைகள் வர்ணங்கள் பூசப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் அருவருப்பானது எனக் குறிப்பிட்டுள்ள விஜய் தணிகாச்சலம், இது ஒட்டுமொத்த ஒன்ராறியோ தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீதான நேரடித் தாக்குதல் எனச் சாடியுள்ளார். வெறுப்புணர்வும் மற்றும் இனப்படுகொலையை மறுக்கும் போக்கும் ஒன்ராறியோவில் இடம்பிடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்லவென்றும் கடந்த 2025ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் இது திட்டமிட்ட ஒரு சதி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஈழத்தமிழன் ஒருவர் சுவிஸ் இராணுவ த்தின் முக்கிய அமைப்பில்..!

ஈழத்தமிழன் ஒருவர் சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில்..! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சுவிஸ் இராணுவத்தின் உயரிய பொறுப்புகளில் ஒன்றை எட்டியுள்ளார். 2025-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய நிர்வாகக் குழுவில், லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் தலைவராகவும், லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட்…

மேலும் படிக்க