தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய சாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டி

முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டி முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை, நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசரச் சிகிச்சைச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான புதிய அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று நேற்று (30) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது. இந்த அம்பியூலன்ஸ் வண்டியானது அதிநவீன வசதிகளைக் கொண்ட “நிசான்” ரக வாகனமாகும். இது ஆரம்பத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்காக (PSD) ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அது சார்ந்த பணிகளுக்காகப் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. நாட்டின் சுகாதாரச் சேவையின் அவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு, இந்த வாகனத்தை வீணடிக்காமல் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்க ஜனாதிபதி செயலகம் (Presidential Secretariat)…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பன்முகப் படுத்தப் பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

2026ஆம் ஆண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்தார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் முன்னெடுக்கப்படவுள்ள சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள் இன்று 30.06.2026இன்று இடம்பெற்றன. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் அவரது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தின் மலசலகூட திருத்த வேலைத்திட்டங்களுக்காக 200,000ரூபாய் நிதியும், முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்திற்குரிய மின் இணைப்பை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக 225,000ரூபாய் நிதியும், வற்றாப்பளை மகாவித்தியாலயத்தின் பாடசாலைக் கட்டடங்களுக்குரிய மின்னிணைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக 200,000ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மூன்று வேலைத்திட்டங்களையுமே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மாணவர் ஏறும், இறங்கும் நேரம் SMS யாழில் டிஜிட்டல் ‘சிசு செரிய’ சேவை

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்கான பிரத்தியேகச் சேவையான ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படுவதுடன், எஞ்சிய தொகை அரசாங்கத்தால்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மரப்பொந்திற்குள் புலிகளின் ‘ஸ்னைப்பர்’ துப்பாக்கி மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு, பக்மிட்டியா காட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று  மாலை மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையினர் வழமை போல் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இத்தேடுதல் நடத்தப்பட்டது. காட்டுப்பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியானது கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்ததுடன், அவர்கள் கெரில்லா போர் உத்திகளுக்காக இவ்வாறான ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆயுதங்கள் நீண்டகாலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் தற்போது துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர்  தெரிவித்துள்ளார். ஸ்னைப்பர் துப்பாக்கி – 01 தொலைநோக்கி (Scope) – 01 ரவைக்கூடு (Magazine) – 01 தோட்டாக்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சிறுவர்களி டையேயும் டெங்கு காய்ச்சல் தீவிரம் இலங்கை மருத்துவ சங்கம்

நாட்டில் தற்போது சிறுவர்களிடையேயும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளமையால், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் பெற்றோர் அலட்சியமாக பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளின் சி. கித்துள்வத்த வலியுறுத்தியுள்ளார். டெங்கு பரவல் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் நேற்று  (30) இலங்கை மருத்துவ சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காய்ச்சல் ஏற்பட்டுள்ள காலப்பகுதியில் ஓய்வு மிக அவசியம். பரீட்சை, போட்டி நிகழ்வு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். இதனால் நோய் தீவிரமடையலாம். பொதுவாக காய்ச்சல், தலைவலி, கடுமையான உடல் வலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படக்கூடும். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் தகுதிவாய்ந்த வைத்தியரை நாடி இரத்த…

மேலும் படிக்க