கன்னியா வெந்நீருற்றில் புத்தவிகாரைக்கா அடிக்கல்!
திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட விவகாரம் புத்தவிகாரை அமைக்கப்படுவதற்கா? இது தமிழரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில் தொல்பொருள் இடங்களை புனரமைப்பு செய்யும் நோக்குடன் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்று காலை 10.20 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்போது திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார் எனப் பலர் கலந்து கொண்டனர். கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் புத்த விகாரை கட்டுவதற்காகவே அடிக்கல் நாட்டப்படவுள்ளது என வெளியான தகவலுக்கமைய இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழர்களின் வரலாறு மழுங்கப்படவுள்ளதாக தெரிவித்து பல அரசியல் பிரமுகர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் குமார்…
மேலும் படிக்க