இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்!

எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டில் எதிர்காலத்திலும் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய விநியோக முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனப் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. மறுஅறிவித்தல் வரை தற்போதைய ஒதுக்கீட்டு எல்லைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறையில் ரத்தக்களரி! 25 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி இந்த வன்முறைச் சம்பவங்களில் 5  சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப விசாரணைகளின்படி, சுமார் 1,800 கைதிகள் உள்ள இந்தச் சிறைச்சாலையில்  “பூரு மூனா” பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் செல்வாக்கின் கீழ் இந்த மோதல் நடைபெற்றதாக பொலிஸார்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காவல். நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் காவல். லையத்தில், போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் காவல். நிலையத்திற்கு, உதவி காவல்துறை. அத்தியட்சகர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகை தந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு பிரிவினருக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இம்மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், தற்போது அங்கு மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பேருந்து புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று திங்கட்கிழமை முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக சொகுசு பேருந்து கட்டணங்களும் அதிவேக வீதிகளுக்கான பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வரும் புதிய பேருந்து கட்டண திருத்தம் குறித்து பேருந்து ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தி, பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான சோதனைகள் இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பிப்பதற்கு இன்னும் 2 நாட்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறை நிலைமை கட்டுப் பாட்டுக்குள்;விசேட விசாரணைக் குழுவொன்று நியமனம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் நேற்று (05) இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதலில் இருவர் உயிரிழந்ததோடு, இந்த வன்முறைச் சம்பவத்தின் போது காயமடைந்த சுமார் 35 கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமென தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்று அம்பலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட தர்க்கமே இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலானது “பூரு மூனா” (Booru Moona) எனும் பாதாள உலகக் கும்பல் தலைவருடன் நெருங்கிய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு அபிவிருத்திக்கு ரூ. 2000 மில். நிதி ஒதுக்கீடு. பிமல் ரத்நாயக்க

நெடுந்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் ரூ.1500-2000 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்பட அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார். நெடுந்தீவு பகுதியில் ரூ. 40மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது. அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.1500-2000 ஆயிரம் மில்லியன் வரை அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. நெடுந்தீவில் ரூ.40மில்லியன் செலவில் நிரந்தரமாக எரிபொருள் நிலையமொன்றை அமைக்கவுள்ளோம். நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிறுவ நாம் கோரிய போது…

மேலும் படிக்க