தாயகச் செய்தி 

முல்லைத்தீவு மாவட்ட செயலாளரைச் சந்தித்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலாளரைச் சந்தித்தார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டசெயலாளருக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் 16.07.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களில் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, கொக்குத்தொடுவாயில் தமிழ்மக்களின் வயல்காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் உப்பள விவகாரம் உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

முள்ளியவளையில் நெற்கொள்வனவு ஆரம்பம்;

முள்ளியவளையில் நெற்கொள்வனவு ஆரம்பம்; நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி விவசாயிகளிடமிருந்து உடனடியாக சிறுபோக நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 08.07.2026அன்று பாராளுமன்றக்க குழு அறையில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியதுடன், கடந்த 13.07.2026 ஆம் திகதியன்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரனிடமும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர் வலியுறுத்தலையடுத்து 15.07.2026ஆம் திகதியிலிருந்து முள்ளியவளை கமநல சேவைநிலையத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவ்வாறு நெல்சந்தைப்படுத்தல் சபையினால் முள்ளியளையில் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அங்கு 16.07.2026இன்று நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நெற்கொள்வனவு தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டதுடன் நிலமைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

செம்மணியில் கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு

இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அகழாய்வின் 34ஆவது நாளான இன்று (16), மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒரு கைக்குழந்தை உட்பட 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், 3 பெரியவர்களின் எலும்புக்கூடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரு பாசிமணியும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அகழாய்வில் மொத்தம் 130 சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்று வரும் அகழாய்வில், இதுவரை அடையாளம் காணப்பட்ட 420 மனித எலும்புத் தொகுதிகளில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

2 கோடிக்கு மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் தம்பதியினர் கைது

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபரான ஆண்டமிருந்து 1 கிலோ 6 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் போது, இவர்கள் ‘மொதர மயூர’ என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. இருப்பினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் விசாரணைகளின் போது, தான் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மன்னாரில் அரச நிறுவனங்கள் மீது பாய்ந்த டெங்கு ஒழிப்பு சட்டம்!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன்  அடிப்படையில், ஒரே நாளில் 3  அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “சட்டம் அனைவருக்கும் சமமானது” என்பதை நிரூபிக்கும் வகையில், தனியார் இடங்கள் மட்டுமன்றி, அரச நிறுவனங்கள் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி சுகாதாரத்துறை மற்றும் முப்படை இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படையின் இணைந்து விசேட வேலைத்திட்டம் நேற்று (15) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

குருநாகல் கார் தீ விபத்து சமூக ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம்

சமூக ஊடகங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி வரும், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காரின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காணொளிக் காட்சி தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அது தொடர்பான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது. சிறுவன் தான் காருக்குத் தீ வைத்ததாகக் குறிப்பிட்டாலும், விசாரணையின் போது நேரில் பார்த்த சாட்சியோ அல்லது வேறு ஆதாரமோ எதுவும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான பாடசாலை வளாகத்திலேயே இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் அறிக்கைகளின்படி, பாடசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 14 லட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்று, ஜூலை 3 ஆம் திகதி தீக்கிரையானது. சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இந்தத் தீவைப்புக்குக் காரணம் என்று குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகாரும் செய்யப்பட்டிருந்தது. புகாரின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

தீர்த்தக்கரை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிக்கல்நாட்டு விழா;

தீர்த்தக்கரை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிக்கல்நாட்டு விழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – கள்ளப்பாடு தெற்கு, தீர்த்தக்கரை, கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா 15.07.2026இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகைதேவா குணசிங்க ராசா, பெருந்திரளான அடியவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. எல்நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வையும் வழங்கி, அதன் ஊடாக இந்த கால நிலைக்கு சவாலை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ற பயிர்ச்செய்கை திட்டமிடலை மேற்கொள்வதற்கான கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கால நிலைத் தாக்கமானது 2026,2027ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது அதன் அடிப்படையில் இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தேசிய மட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. வட மாகாணத்தில் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து எவ்வாறு காலநிலை…

மேலும் படிக்க