தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த 7 மாதங்களாக ஆசிரியர் நியமிக்கப்படாததைக் கண்டித்து தரம் 03 மாணவர்களுக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்கக் கோருதல் மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில்… பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர் இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் கல்வி சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவனயீர்ப்பு போராட்டம்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் காங்கேசன் துறை எரிபொருள் களஞ்சிய த்திற்கு அருகில் திடீர் தீ

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென தீ பரவிய நிலையில், கடற்படையினர் மற்றும் பெற்றோலிய அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்தைச் சூழவுள்ள வெற்றுக்காணிகள் நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்படுவதுடன், அவற்றில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த காணிகளின் நிலைமை தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்டமை தொடர்பிலும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என எச்சரிக்கும் பதாகைகளை காட்சிப்படுத்துமாறு காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரியிடம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக எழுத்துமூலமான கோரிக்கை கடிதம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமா குமரனுக்கு, ரவிகரன் எம்.பி வாழ்த்து;

ஐக்கிய இராச்சியத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமா குமரனுக்கு, ரவிகரன் எம்.பி வாழ்த்து; ஈழத் தமிழர் விவகாரத்திலும் கரிசனையோடு செயலாற்றுமாறும் வேண்டுகோள் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற இணை அமைச்சராக (Parliamentary Under-Secretary of State) அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரான உமா குமரன் அவர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக எதிர்நோக்கிவரும் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நீதி, காணி உரிமைகள், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை முழுமையாக மீள நிறுவுதல், நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு மனித நேயமும் நீதியும் சார்ந்த தீர்வைக் காண்பதற்கான பன்னாட்டு முயற்சிகள், சமத்துவம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்கள் மற்றும் போராளிகள் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு நேற்று வடக்கு கிழக்கில் இடம்பெற்றது. திருகோணமலை பிரதான கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் மண்டபத்தில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, உயிர்நீத்தோரின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் தியாகம் நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கடைகளுக்குள் புகுந்த சொகுசு பஸ்! மட்டக்களப்பில் பாரிய விபத்து

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை  பாரிய விபத்தில் சிக்கியுள்ளது. அதிகாலை சுமார் 04.45 மணியளவில்  பஸ், திடீரென பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் அமைந்திருந்த கடைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் பஸ் வண்டிக்கும் கடைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்தமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க