தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம்; எச்சரிக்கை!

மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. ​இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ​இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று, அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும் அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.   ​இராணுவப் பிடிக்குள் இருக்கும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வன்னியில் உள்ள காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை .அருண ஜெயசேகர

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னமும் 1,493.2 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இதில் வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவில் அமைந்துள்ள காணிகள் மிக முக்கியமானவையாகும், எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய கூட்டுறவுப் பிரதியமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  உபாலி சமரசிங்க, நாட்டில் மீண்டும் போர் ஏற்படாது.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

செம்மணிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பொறுப்புக்கூறுவதை வலியுறுத்தியும் நீதி கோரும் வகையிலும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு நேற்று (30) யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது. அரியாலை புனித யூதாததேயு திருச்சொரூபம் முன்பாக ஆரம்பமான இப்பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கையை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ் வாசித்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ், புங்குடுதீவில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் பலி

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் நேற்றுமுன்தினம் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்குள் பனை வெட்டுவதற்காக சென்றுள்ளார். இதன்போது அவரை கருக்குளவி கொட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, அவரது மகன் அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ஊடகவியலாளர் களால் போராட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்த நிலையிலையே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி, ஊடக பிரதி அமைச்சரின் நிகழ்வினை யாழ். ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்தனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வினாசிகுளம் பால த்தை நிர்மானிக்க நடவடிக்கை ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

வவுனியா வடக்கு வினாசிகுளம் பாலத்தை நிர்மானிக்க நடவடிக்கை மேற்கொள்க; ரவிகரன் எம்.பியிடம் பொதுமக்கள் கோரிக்கை வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, மாமடு கிராம அலுவலர் பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலத்தையும் நிர்மாணிக்குமாறு அப்பகுதிமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அண்மையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார். இதன்போதே மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாண்டான்குளம் வீதி சீரின்றிக் காணப்படுவதாலும், அவ்வீதியோடு இணைந்துள்ள வினாசிகுளம் பாலம் இதுவரை அமைக்கப்படாமல் காணப்படுவதால் வினாசிகுளம் கிராமமக்கள் பாரிய போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். அந்தவகையில் குறித்த சாண்டான்குளம் வீதியும், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலமும்…

மேலும் படிக்க