தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அம்பாறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதமுனை 6ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (20) என்ற திருமணமாகாத பெண், கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு அதிகாரிகளும் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்தனர். கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார். உயிரிழப்பில் சந்தேகம் காணப்படுவதால், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார். அங்கு சட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சாட்சியங்களின்றி தனிநபர் தாக்குதல் களை மட்டுமே எதிர்க்கட்சி முன்னெடுக்கிறது பிரதமர்

சட்டத்தின் ஆதிக்கத்தினை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதையே நாம் செய்துவருகின்றோம்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மக்கள் ஆணைக்கு அமைவாகச் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான,நேற்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதனையும் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பதற்கு அவர்கள் தவறிவிட்டனர் என்றும், அவர்களின் வாதங்கள்…

மேலும் படிக்க
புலச் செய்திகள் பொதுவான செய்திகள் 

பிரித்தானிய அரசில் முதல் தமிழ் பெண் இராஜாங்க அமைச்சர்; உமா குமரன்

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதன் மூலம், பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை உமா குமரன் படைத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அமைச்சுப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “எனது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்கா விமான படைத் தளம்மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்ட நாள்

24.7.2001ம் ஆண்டு கட்டுநாயக்கா விமான படைத் தளம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரகாவியமான 14கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்   தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது தரைகரும் புலிகள் சென்று தாக்குதல் நடத்தி வீர வரலாறு படைத்து விடுதலை போராட்டத்திற்கு திருப்பு முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாள். தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களையும் வெற்றி தாக்குதல்களையும் நினைவிற்கொண்டு புலிகளின் வீரத்தினையும் வரலாற்றினையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. கட்டுநாயக்காவில் குண்டுகளை ஏற்றி தமிழர் வாழ் இடங்கள் மீது வீசி தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களத்தின் வான் கழுகுகளை அவர்கள் வாழ்கின்ற குகைக்கு சென்று அழித்த க*ரு*ம்*பு*லி மறவர்களின் வீரத்தினை அவர்களின் வரலாற்றினை இன்று நினைவு கொள்ள…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட ங்கள்; சுற்றுலா அமைச்சின் விசேட தலையீடு ரவிகரன்

சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள்; சுற்றுலா அமைச்சின் விசேட தலையீடு தேவை என – ரவிகரன் எம்.பி வலியுறுத்து சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு சுற்றுலா அமைச்சு விசேட தலையீட்டை மேற்கொள்ளவேண்டுமென சுற்றுலா பிரதி அமைச்சரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்த சுற்றுலா பிரதிஅமைச்சர் ருவன் ரணசிங்க, முல்லைத்தீவு மாவட்டத்தில் 76சுற்றுலா மையங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அதில் 10சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் 23.07.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை சுற்றுலா அதிகார சபையால் 2025 மே…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளியில் 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கல்லாறு பகுதியில் 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற  இரகசியத் தகவலின் அடிப்படையில் கல்லாறு  கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11:45 மணியளவில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் பொலிஸார்  மீட்டனர். அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும்  சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம்  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட  கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

A/L பரீட்சை ஒத்திவைப்பு கோரிக்கை தள்ளுபடி!

2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனுவை (Writ Petition) மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட நீண்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது. தமது முதலாவது மற்றும் இரண்டாவது தடவைகளுக்காக 2026 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு சில மாணவர்களினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதிய கால அவகாசம் கோரி அவர்கள் இந்த சட்ட நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும், நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின்படி திட்டமிட்டவாறு அடுத்த மாதமே பரீட்சை நடைபெறும் என்பது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

குருதிப் பரிசோதனைக்கு அதிக கட்டணம்; யாழ். வைத்தியசாலைக்கு ரூ. 3 மில். அபராதம்

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, இரத்தப் பரிசோதனைக்காக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தமை தொடர்பில் ரூ. 30 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு (CAA) கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டு, இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை இரத்தப் பரிசோதனைக்காக (FBC) நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச கட்டணமான ரூ. 400 இற்கு பதிலாக ரூ. 550 அறவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை 13ஆம் திகதியன்று இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அவ்வைத்தியசாலையில் சோதனை நடத்தியதோடு, இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியசாலை நிர்வாகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றினால்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறிச் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் நேற்று புதன்கிழமை மாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது இரணைதீவுக்குத் தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கன்னியா வெந்நீருற்றில் புத்தவிகாரைக்கா அடிக்கல்!

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட விவகாரம் புத்தவிகாரை அமைக்கப்படுவதற்கா? இது தமிழரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில்  தொல்பொருள் இடங்களை புனரமைப்பு செய்யும் நோக்குடன் இன்று  அடிக்கல் நாட்டப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்று  காலை 10.20 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்போது திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார்  எனப் பலர் கலந்து கொண்டனர். கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் புத்த விகாரை கட்டுவதற்காகவே  அடிக்கல் நாட்டப்படவுள்ளது என வெளியான தகவலுக்கமைய இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழர்களின் வரலாறு மழுங்கப்படவுள்ளதாக தெரிவித்து பல அரசியல் பிரமுகர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் குமார்…

மேலும் படிக்க