மன்னார் காற்றாலை மின் நிலைய நிர்மாணப் பணிகள் முன்னெடுப்பு வலுசக்தி அமைச்சு
மன்னார் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முதல் கட்ட காற்றாலை டர்பைன்கள் சில வாரங்களுக்கு முன்பு இலங்கையை வந்தடைந்தன. மீதமுள்ள அனைத்து உபகரணங்களும் தற்போது திருகோணமலை துறைமுகம் வந்தடைந்துள்ளதுடன், அவற்றை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் மூலம் பூர்த்தி செய்வதற்கான அரசின் இலக்கை நோக்கிச் செல்லும் முக்கிய ஆரம்ப நடவடிக்கையாக இந்த மன்னார் காற்றாலை மின் நிலையத் திட்டம் கருதப்படுகிறது. மேலும், 2050 ஆம் ஆண்டுக்குள் இலங்கை அடைய எதிர்பார்க்கும் ‘நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்ற’ (Net Zero…
மேலும் படிக்க