சிறைச்சாலை சம்பவங்களுக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் நீதியமைச்சர்
தமது பொறுப்பிலுள்ள அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அதன் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக நீதியமைச்சர் ஹர்சண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எவருடைய உயிரும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

