ஐந்தாண்டு காலப் பகுதிக்குள் 13ஆயிரத்து 600 தாதியர்களை சேவையில் சுகாதார அமைச்சர்,
ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் 13ஆயிரத்து 600 தாதியர்களை சேவையில் இணைப்பதை இலக்காக கொண்டு புதிய செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்த சுகாதார அமைச்சர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 14 மாதங்களில் மாத்திரம் நாங்கள் சுமார் 5,000 தாதியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம். ஆனால், எல்லா இடங்களிலிருந்தும் வரும் ஒரே முறைப்பாடு என்னவென்றால், ‘தாதியர்கள் போதுமானதாக இல்லை’ என்பதுதான். கடந்த கொவிட் நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, பெருமளவிலான தாதியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் எங்களது உத்தியோகத்தர் பட்டியலில் இருந்தாலும், தற்போது பணியில் இல்லை. இதுவே பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். 5,000 பேரை வேலைக்கு…
மேலும் படிக்க