சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதிதமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் – ரவிகரன்

வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவு – வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுக்கூட்டம் 03.06.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது, பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதி நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தோம். குறிப்பாக எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விடயத்திலும் அதேபோல தவறிழைப்பதற்கு இடமளிக்கமுடியாது என்பதையும் அதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம். இருப்பினும் வட்டுவாகல்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விடுதலை.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு நேற்று (02) செவ்வாய்க்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையை வந்தடைந்துள்ளனர். இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்நிலை இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த மீனவர்கள் அனைவரும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ௭ இலங்கை செய்திகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் வெவ்வேறு காலப்பகுதிகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் பின்னர் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிவான் உத்தரவின் பேரில் நாட்டின் பல்வேறு சிறைகளில் நீண்டநாட்களாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, நீதிமன்றங்களினால் நிபந்தனையடிப்படையில் விடுவிக்கப்பட்ட இந்த 30 மீனவர்களும், உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பான விசாரணை: நீதிமன்ற வழக்கு முடிவுறுத்தம்!

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நாளையுடன் (04ஆம் திகதி) நிறைவடைவதால், அந்த வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, எதிர்மனுதாரர்கள் குறிப்பிடப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மன்றில் கோரிய நிலையில், மனுதாரர் தரப்புச் சட்டத்தரணியின் இணக்கத்துடன் வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டது. மன்னார் நகர சபைத் தவிசாளரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் இன்றைய அமர்வில், எதிர்மனுதாரர்கள் சார்பில் அரச சட்டவாதி முன்னிலையாகியிருந்தார். இதன்போது மன்றுக்கு விடயங்களைத் தெளிவுபடுத்திய அரச சட்டவாதி, குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஆங்கில மற்றும் சிங்கள மொழியாக்கங்களில் ‘நகர சபை’ என்பதற்குப் பதிலாக ‘மாநகர சபை’ எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமிழ்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை சாட்சி யத்திற்கு அழைக்க இடைக் காலத் தடை

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை சாட்சியத்திற்கு அழைக்க இடைக்காலத் தடை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக, அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான உதித இகலஹேவா, ஃபர்மான் காசிம் மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

கோயம்பேடு கேளிக்கை விடுதி தகராறு; யான்சியைத் தொடர்ந்து சிறுமியும் உயிரிழப்பு

சென்னை – கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது திட்டமிட்டு காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னதாக இந்த கொடூர சம்பவத்தில் ‘யான்சி’ என்ற 18 வயது இலங்கை அகதி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (18) என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். தனது தோழியை நேரில் சந்திப்பதற்காக யான்சி சென்னைக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, அவர்கள் கோயம்பேட்டில் உள்ள ஒரு பிரபல கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்த மற்றொரு தரப்பினருடன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில்.திருத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் ஜூன் மாதத்துக்கான விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் வியாழக்கிழமை வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்தியமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இறுதி அறிக்கை நாளை மறுதினம் வியாழக்கிழமை கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உலக சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு அமையவே இம்முறை எரிவாயு விலையைத் திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞர் பலி.

வவுனியா, கனகராயன்குளம்  காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருசுட்டுக்குளம் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் மோதி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதா    காவல் துறையினர்.தெரிவித்துள்ளனர். நேற்று (02) மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து கனகராயன்குளம்  காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இவ்விபத்தில் குருசுட்டுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் குருசுட்டுக்குளம் கோயிலுக்குச் சொந்தமான காணியைச் சுத்தப்படுத்துவதற்காக உழவு இயந்திரத்தை இயக்க முற்பட்டபோது, அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அந்த உழவு இயந்திரத்தைத் திருத்திக் கொண்டிருந்தபோது, அது திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது. இதன்போதே அவர் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு…

மேலும் படிக்க