தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும்

‘டித்வா’ சூறாவளியினால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நேற்றையதினம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இச்சூறாவளி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,121 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அவர்களுக்கான 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்குதல் மற்றும் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுதல் என்பன இதன்போது இடம்பெற்றன. இதில் அதிகளவிலான வீட்டுச் சேதங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த வீடுகளின் எண்ணிக்கை 499 ஆகும். அங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர், அனர்த்தத்தினால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கான புதிய வீடமைப்புப் பணிகளை ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், தமக்கென ஒரு வீட்டை அமைத்து பாதுகாப்பாக வாழ்வதே இக்குடும்பங்களின் எதிர்பார்ப்பு எனவும், அதனை விரைவாக நிறைவேற்ற…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அமைச்சர் சந்திர சேகர் அடியாள்கள் கூச்சலிட்டு கூட்ட த்தைக் குழப்பி னார்கள். கஜேந்திரன்

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற குழப்பம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு தரமுயர்த்துவது தொடர்பான விவகாரத்திலும், தையிட்டி விகாரை காணி விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கருத்துக்களை முன்வைத்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குழப்பமடைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை உரையாட விடாமல் தடுத்து தொடர்ச்சியாக குழப்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசினுடைய தேவையை நிறைவு செய்வதற்காகவே அர்ச்சுனா…

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய பாடகர் சத்தியன்

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தினால் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (21) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களையும் இடங்களையும் பார்வையிட்டார். அதன் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் சென்ற சத்தியன், யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தனது அஞ்சலியைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இதுவரை எலும்புக் கூடுகள் 405 அடையா ளம் காணப்பட்டன!

தலைப்பு: செம்மணி மனித புதைகுழி அகழ்வு: 30ஆம் நாளில் மேலும் 7 எலும்புக்கூடுகள் மீட்பு; இதுவரை 405 அடையாளம் காணப்பட்டன!  செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆம் நாள் பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட நிபுணர்கள் மற்றும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றன. நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட இந்த எலும்புக்கூடுகளில், இதுவரை 377 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, மேலதிக தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனைகளுக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இன்னும் பல…

மேலும் படிக்க