தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: வீடு ஒன்றில் இருந்து 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றா சீனிப் பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சுரேந்திரன் அவர்களின் ஆலோசனையின் கீழ் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா அவர்களின் வழிப்படுத்தலில் நெளுக்குளம் பொது சுகாதார பரிசோதகர் ம.அன்ரன் தலைமையில் பூவரசன்குளம் பொது சுகாதார பரிசோதகர் டிலுக்சன், கூமாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் பவிந்திரன், சாஸ்திரி கூழாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் துவாரகன் ஆகியோர் இணைந்து பொலிசாரின உதவியுடன…

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு (ஜூன் 27) காலமானார்

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று (ஜூன் 27) காலை காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பாக்யராஜ். இவர், 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு தான் சென்னை திரும்பி உள்ளார் பாக்யராஜ். இன்று காலையில் வழக்கம் போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூற உடனடியாக அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் உள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

குற்றவாளி நாட்டை விட்டு தப்ப கடவுச்சீட்டு பெற்றுக் கொடுத்த அதிகாரி கைது

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினல் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் உதவி கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய குறித்த அதிகாரி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக போலியான கடவுச்சீட்டைத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக, மற்றொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டைத் தயாரித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் நேற்று மாலை (26) கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாக கைதான கண்டியைச் சேர்ந்த, 41 வயதான குறித்த சந்தேக நபர் ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒட்டு சுட்டான் தட்டாமலை இணைப்பு வீதியின் சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

ரவிகரன் எம்.பியின் தொடர் கோரிக்கை; ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் ஒட்டுசுட்டான் தட்டாமலை இணைப்பு வீதியின் தாழ்நிலப்பகுதியின் சீரமைப்புபணிகள் ஆரம்பம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏம்பல் குளத்து நீரால் மூடப்படும் தட்டாமலை, ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதியின் தாழ்வாக உள்ள பகுதியை சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தநிலையில், குறித்த பகுதியை நீர் ஓடும் கட்டுமானங்கள் (பெட்டி மதகுகள்) உடனான உயர்த்தப்பட்ட பாதையாக சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில், இரண்டு கோடியே ஒருஇலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பதுரூபாய் என்னும் ஒப்பந்தத் தொகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுவரும் சீரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒட்டுசுட்டான்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தமிழர் இருப்புக்கு தொடரும் சவால்கள் – அருட்தந்தை மா. சத்திவேல்

செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல், இலங்கையில் ஆயுதப் போரின் பின்னரும் தமிழர் இருப்புக்கான சவால்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (27) வெளியிட்ட ஊடக அறிக்கையில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, 1948 சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் அரச கட்டமைப்பின் ஆதரவுடன் பல தசாப்தங்களாக செயல்பட்டு வருவதாகவும், இதன் பாதிப்புகள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழர்கள் மீது தொடர்ந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கு–கிழக்கு பகுதிகளிலும், மலையகத்திலும் நில ஆக்கிரமிப்பு, குடியேற்ற நடவடிக்கைகள், பௌத்த சின்னங்கள் அமைத்தல் உள்ளிட்ட காரணங்களால் தமிழர் தாயகப் பரப்புகள் குறைக்கப்படுகின்றன என்றும், இதன் மூலம் மக்கள் சுயமாக இடம்பெயர்க்கப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழர் தாயகத்தில் காணிகள் படையினரும் அரச…

மேலும் படிக்க