சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்! சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்! ​ அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. ​”குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்னும் பொருண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ​இக்கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள், “பாடினால் பயங்கரவாதமா? தாயகக் கலைஞனை உடனே விடுவி!”, “தமிழர் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?”, “ஜனநாயகத்தின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி. 8 வயது சிறுவன் பலி

பொத்துவில் – பாணம பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதிய வேளையில் பசரச்சேனை பகுதியில் வீதியோரமாக சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஒன்று உந்துருளி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில்  உந்துருளி ஓட்டுநரும் சிறுவனும் படுகாயமடைந்தனர். சம்பவத்தையடுத்து இருவரும் உடனடியாக பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வருடங்களும் 10 மாதங்களும் வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், வீதிகளில் வாகனங்களை இயக்கும் போது வேகக் கட்டுப்பாடு மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக…

மேலும் படிக்க