இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்! பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பகுதிகளில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோர மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் சீரற்ற வானிலைக்கு மத்தியில், மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இன்று (24) முற்பகல் 6.00 மணி முதல் நாளை முற்பகல் 6.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை யில் 28,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 28,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்நிலையம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, அனர்த்தங்களினால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அங்கு 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக, புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,051 குடும்பங்களைச் சேர்ந்த 4,566 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,204 குடும்பங்களைச் சேர்ந்த 4,558 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், காலி மாவட்டத்தில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. கட்டுரை 

இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலை யின்மை

இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை ⊰❉⊱═════════════════⊰❉⊱ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═════════════════⊰❉⊱ 𓂀 அறிமுகம்: வெளிப்படையான நிலைத்தன்மையும் மறைந்திருக்கும் முரண்பாடுகளும் 𓂀 இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை இரண்டு வேறுபட்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரு புறம், சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) ஆதரவில் செயல்படுத்தப்படும் சீர்திருத்த திட்டத்தின் கீழ் சில நிலைத்தன்மை குறியீடுகள் காணப்படுகின்றன. பணவீக்கம் குறைந்துள்ளது, மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மீண்டும் நேர்மறை நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களுக்குப் பின்னால், இறையாண்மைக் கடன் நெருக்குதல் (sovereign default), நாணய வீழ்ச்சி மற்றும் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஆகியவற்றிலிருந்து இன்னும் மீளாத…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தேசிய மக்கள் சக்தியின் யாழ் ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப் பட்டுள்ளது

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகமானது இன்று(23.5.2026) யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , அரியாலை பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்வில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான , க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் , மாநகர சபை உறுப்பினர்களான, சு.கபிலன் , ச.பிரதீபன் உள்ளிட்ட யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் , கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கடலில் தத்தளித்த தமிழக கடற் றொழிலாளர் மீட்பு

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழகம் இராமேஸ்வரம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  இதே நேரம் இன்று (23) மாலை 4.30 மணியளவில் குறித்த மீன்பிடியாளர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளை (24) குறித்த தமிழக கடற்றொழிலாளரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் நெடுந்தீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒரே நேரத்தில் பல பகுதிகளில் இடம்பெற்ற சுத்திகரிப்பு நடவடிக்கை

’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டின் பல மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் இன்று (23) ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். “அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில், யாழ்ப்பாண பண்ணை கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. இலங்கை இராணுவத்தின் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் 256 கரையோர சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கிணங்க யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 30 இடங்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புகளுடன், அரச அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கிழக்கு காணிகளை பாதுகாக்க விசேட குழு – ஜனாதிபதி அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விசேட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்படுவதால் மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இதனைத் தடுக்கும் நோக்கில் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று (22) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும், அம்பாறை மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாக பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாக அமைப்புகள் அரசியல் சார்ந்தவை அல்ல, அவை முழுமையாக நிர்வாக பணிகளாகவே செயல்பட வேண்டும் எனவும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

அத்தியார் இந்துக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு

யாழ்ப்பாணம்,  நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நேற்றைய தினம் விழிப்புணர்வு  நாடககம் அரங்கு ஆற்றுகை  செய்யப்பட்டுள்ளது அண்மைக்  காலமாக அதிகளவான  இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதை பாவனையிலிருந்து அவர்களை விடுவிக்கும் முகமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே குறித்த விழிப்புணர்வு நாடகம் நேற்றைய தினம் அரங்காற்றுகை  செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வில் மாணவர்கள் அதிக அளவில் பயன் பெற்றுள்ளன

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து தொலைத்தொடர்பு கம்பம் உடைந்து சேதம்

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், தொலைத்தொடர்பு கம்பம் இரண்டு முழுமையாக உடைந்து சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து இன்று (22) அதிகாலை 12.00 மணியளவில் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட92 ம் கட்டை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சீமந்து (சிமெண்ட்) ஏற்றுவதற்காகச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த வேளையில் லொறியில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் (நித்திரைச் சிறுக்கம்) காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி தொலைதொடர்பு காமத்தை உடைத்துக்குண்டு மரத்தில் மோதி  அருகில் இருந்த மற்றுமோர் தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அநுரவின் வாக்குறுதிகள் எங்கே? மயிலிட்டியில் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள்…

மேலும் படிக்க