சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி.

இயக்குனர் இமயம் பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி. இந்திய அரசு வழங்கிய “பத்மபூஷன்” எனும் விருதை விட என் தமிழீழ மக்களின் விடுதலையே எனக்கு முதன்மையானது என்று கூறி பத்மபூஷன் விருதை உதற எறிந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழீழம் சென்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து உறவாடித் திரும்பியவர் பாரதிராஜா. பாரதிராஜா அவர்கள் மீது அளவற்ற பெருமதிப்பை வைத்திருந்தார் தலைவர் பிரபாகரன். இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழீழ விடுதலை போராட்டம் குறித்த திரைக்கலை படைப்பொன்று உருவாக்க பாரதிராஜா அவர்கள் திட்டமிட்டிருந்தும் அவருடைய அந்த கனவு நிறைவேறாமல் போனது உலகத் தமிழர் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பேரிழப்பாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்கின்றது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

குவைத்தில் போதைப் பொருள் வேட்டை; 3 இலங்கையர் உட்பட 7 பேர் கைது

குவைத்தில் போதைப்பொருள் தொடர்பான தனித்தனி நடவடிக்கைகளில் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு குவைத் பிரஜை, ஒரு இந்தியர், மூன்று இலங்கையர்கள் மற்றும் இரண்டு நாடற்றவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்த பல்வேறு வகையான போதைப்பொருட்கள், மனநிலையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் அவற்றை பொதி செய்து விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களில் 2.550 கிலோகிராம் ஹஷிஷ், 150 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை அடங்குகின்றன. மேலும், கைது நடவடிக்கைகளில் ஒன்றின் போது சந்தேகநபர் ஒருவர் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படுவதால், அவருக்கு எதிராக கூடுதல் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மண்டைதீவு படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம்:

மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் 31 மீனவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதன் 40 ஆவது ஆண்டு நினைவு தினம், நேற்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபியருகே நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். குருநகர் ஆலய பங்குத்தந்தையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, நினைவுத் தூபிக்கு மெழுகுவர்த்தி மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கடந்த 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி, குருநகர் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்பட 31 மீனவர்கள் ஒரு படகில் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்டைதீவுக்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு நிலைநாட்டப்பட்டிருந்த கடற்படையினர், அந்த மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

இன்று (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால்…

மேலும் படிக்க