இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கஜேந்திரகுமார் உள்ளிட்ட எம்.பிக்களின் ஆசனங்களில் மாற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் தமது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விடுத்த கோரிக்கையையடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த இராமநாதன் அர்ச்சுனா எம்.பியும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்படி எதிர்க்கட்சியின் நான்காவது தொகுதியில் முதல் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த கஜேந்திரகுமார் எம்.பி.யின் ஆசனம் அந்த வரிசையில் முதலாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை காலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அடுத்ததாக யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் ஆசனம் அமைந்திருந்தது. ஆனால் அர்ச்சுனா இராமநாதனுக்கு அருகில் உள்ள தனது ஆசனத்தை அரசியல் கட்சி மற்றும் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் வேறு இடத்திற்கு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு மோதல்: சிறையிலிருந்த பெண் கைதிகள் வேறு சிறைக்கு இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (08) குறித்த கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது இவ்வாறு மாற்றப்பட்டவர்களில் அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பெண் கைதிகள் சிலரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எவ்வாறாயினும், தற்போது அந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், முறைப்படியாக அந்தக் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள ஆண் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள வசதிகளை ஆராய்ந்து இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகச் சிறைச்சாலைகள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் சிக்கிய வாகனம்! தப்பியோடிய சாரதி

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, பல கிலோமீற்றர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்று கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தகவலின்படி, மாங்குளத்திலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த குறித்த வாகனம், பொலிஸ் சோதனையில் சிக்காமல் இருக்க இரணைமடு சந்தியிலிருந்து திருவையாறு உள்வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது. அதேவேளை, திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் வீதித்தடையை அமைத்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கப் ரக வாகனத்தை மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது, சாரதி பொலிஸாரின் உத்தரவை மீறி அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸார் மோட்டார் சைக்கிள்களில் வாகனத்தைத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் பல்கலைக்கழக” பேராசிரியருக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்த கோரி  பல்கலை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை “பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் அழைப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் காலத்தை இழுத்தடிக்காது விசாரணைகளை துரிதப்படுத்த கோரி, பல்கலைக்கழக முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , “பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’. “பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்” , ” குற்றத்தை மறைக்க சட்டத்தை…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறை! வெளியான வர்த்தமானி

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். அதற்கிணங்க, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பழைய போகம்பர வளாகம் ஒரு சிறைச்சாலையாகச் செயல்படும். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2-ன் மூலம் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் நேற்று முன்தினம் (07) மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் இந்திய கைதியும் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வௌியாடாத போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்தியாவினால் அறிக்கையொன்று அனுப்பபட்டுள்ளமை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. அவ்வாறான அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளமையை இலங்கையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இருவேறான வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய (8) நிலவரப்படி 28 ஆக அதிகரித்திருந்தது. இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவினர் நேற்று (08) இரவு வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். படவிளக்கம் குறிப்பிட்ட கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

காணிவிடு விப்பிற்காக போராடும் கேப்பாப்பிலவு மக்களை பாாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திக்க வேண்டும்; ரவிகரன்

காணிவிடுவிப்பிற்காக போராடும் கேப்பாப்பிலவு மக்களை பாாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திக்க வேண்டும்; ரவிகரன் எம்.பி கோரிக்கை தமது பூர்வீக காணிவிடுவிப்பிற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நேரில் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 16.07.2026ஆம் திகதியன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள சூழலிலேயே பாராளுமன்ற உறுப்பினரால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றில் 08.07.2026இன்று உரைமாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார் இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி இன்றோடு 15ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணி விடுவிப்பை வலியுறுத்தி அந்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கிண்ணியாவில் சட்டவிரோத மண் அகழ்வு: 12 சாரதிகள் கைது, 12 வாகனங்கள் பறிமுதல்!

கிண்ணியா, உப்பாற்றுக் கங்கை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட 12 சாரதிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மண் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (07) இரவு வேளையில் விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் எவ்வித அனுமதியும் இன்றி, சட்டவிரோதமான முறையில் இவர்கள் மண் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 7 டிப்பர் வாகனங்களும்,05 உழவு இயந்திரங்களும் 05 கைப்பற்றப்பட்டன. அனைத்து வாகனங்களும் மண் ஏற்றப்பட்ட நிலையிலேயே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 12 சாரதிகளும் கிண்ணியா பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்றைய தினம் (08) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய – பிரதான பாதையை திறக்க நடவடிக்கை

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். பாதுகாப்பு காரணங்களால் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிரதான பாதையை, ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திறந்து வைப்பது குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டது. இதன் விளைவாக, ஆலயத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் வினவிய – ரவிகரன்

கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் வினவிய – ரவிகரன் எம்.பி; சாத்தியப்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு முல்லைத்தீவிற்கு வருகைதரவுள்ளதாக வீதிஅபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் பதில் கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதுதொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைகளை பரிசீலிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இதன்போது பதிலளித்துள்ளார். பாராளுமன்றக்குழு அறையில் 07.07.2026இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 21.05.2026அன்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்…

மேலும் படிக்க