சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலிட்டியில் மக்க ளின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை; ரவிகரன்

மயிலிட்டியில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை; ரவிகரன் எம்.பி பங்கேற்பு யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டிந் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு மக்களால் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

மன்னாரில் 150 மெகா வோட் காற்றாலை மின்உற்பத்தி நிலையம்

இலங்கையின் மின்சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை விரைவுபடுத்தும் நோக்கோடும், மன்னார் – கொண்டச்சி பகுதியில் 150 மெகாவோட் கொள்ளளவு கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. வலுசக்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.மன்னார், சிலாவத்துறை – கொண்டச்சி பகுதியிலுள்ள இலங்கை முந்திரி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அரசகாணியில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சுமார் 31 நவீன காற்றுச் சுழலிகள் மூலம் 150 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மின்சார விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, மேம்பட்ட மின்கல மின்சக்தி சேமிப்பு அமைப்புடன் (BESS) இது இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், பறவைகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் விரிவான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தி யங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 8 டிங்கிகள், 2 கெனோக்கள், 4 டிராக்டர்கள் ஆகியவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனஇவை தவிர, கடலட்டைகள், வணிக ரீதியான வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலை பனிச்சங்கேனி, சோபா தீவு, பொல்மல்குடா, கின்னியா, சூடைக்குடா, ஒட்டமாவடி, ஆலம்பில், புதுவக்காடு மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிகுளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மேலதிக சட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வடமேல் மாகாணங்களில். இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

2025ஆம் ஆண்டுக்கான அதிபர் சேவையின் தரம் III இற்கு போட்டிப் பரீட்சை

2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதிப் பத்திரங்களை தங்களது திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இப்பரீட்சை ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அதனைத் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

விவசாயிகளி டமிருந்து சிறுபோக நெற் கொள்வனவு மேற்கொள்ளப் படவேண்டும் – ரவிகரன்

விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் சிறுபோக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள சூழலில், தாமதமின்றி துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03.06.2026நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கிவருகின்றது. இந்நிலையில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நெற்கொள்வனவில் தாமதங்கள் ஏற்படுமா? அத்தோடு சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து  கொள்வனவுசெய்து களஞ்சியப்படுத்துவதற்கு  நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் உள்ளதா? இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினர் விளக்கங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இங்குள்ள நெற் களஞ்சியசாலைகளில் நெல் நிரம்பியிருப்பதாக…

மேலும் படிக்க
கட்டுரை மருத்துவ குறிப்பு 

இரத்தத்தின் pH அளவைப் பாதுகாக்கும் மனித உடலின் அசாதாரண உயிரியல் அமைப்புகள்

உடலின் நுட்பமான சமநிலை: இரத்தத்தின் pH அளவைப் பாதுகாக்கும் மனித உடலின் அசாதாரண உயிரியல் அமைப்புகள் அமில–கார சமநிலையின்மையிலிருந்து ஒவ்வொரு உயிரணுவையும் பாதுகாக்கும் மறைக்கப்பட்ட அறிவியல் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர்: ஈழத்து நிலவன் மருத்துவமனை விசேட மருந்தியல் நிபுணர் | அரசு மருத்துவ ஆராய்ச்சியாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ 🔬 உயிரின் அமைதியான காவலன் – இரத்தத்தின் pH மனித உடல் என்பது கோடிக்கணக்கான உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாடுகள் ஒரே நேரத்தில் துல்லியமாக நடைபெறும் ஒரு அதிசய உலகமாகும். நாம் சுவாசிப்பது, சிந்திப்பது, நகர்வது, உணவைச் செரிப்பது, இதயம் துடிப்பது, நரம்புகள் தகவல்களை பரிமாறுவது போன்ற ஒவ்வொரு செயற்பாடும் மிக நுட்பமான வேதியியல் சமநிலைகளின் மீது தங்கியிருக்கின்றன. இந்த சமநிலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இரத்தத்தின் pH அளவு விளங்குகிறது. சாதாரண நிலையில் மனித இரத்தத்தின் pH 7.35 முதல்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மூதூரில் வீதி புனரமைப்பின்போது – புதைக்கப்பட்ட கைக்குண்டு மீட்பு

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள நெய்தல் நகர் மையவாடி வீதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (04) காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் – நெய்தல் நகர் பகுதியிலுள்ள குறித்த வீதியின் புனரமைப்பு பணி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது போத்தலில் அடைக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இக் கைக்குண்டு தென்பட்டுள்ளது. இதனையடுத்து வீதி புனரமைப்பு வேலை செய்தவர்களால் மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட போத்தலில் மற்றுமொரு கைக்குண்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அவ்விடத்தில் பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற அனுமதியை பெற்றதன் பின்னர் கைக்குண்டுகள் மீட்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

முதியோர் இல்லம் தீக்கிரை; 11 பேர் தீயில் கருகி பலி – மூவர் மாயம்!

களுத்துறை மாவட்டம், ஹொரணை,  அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக இல்லத்தில் இருந்த சிலர் தீயில் கருகியுள்ளனர். அவ்வாறு தீயில் கருகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், மனநலக்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறிப்பிட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைத் தயாரித்துக் கொள்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க