செருப்பு மாலை அணிவித் திருந்த தனது பதாகையை கிழித்து, அறுத்துச் சென்ற அர்ச்சுனா
யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவித்திருந்த தனது பதாகையை கிழித்து, தனது காரில் அர்ச்சுனா இராமநாதன் எடுத்து சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை இலக்கு வைத்து அவமதிப்பான வாசகங்கள் கொண்ட 10 அடி உயர பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில், சின்னக்கடை பகுதிக்கு அண்மையில் இந்தப் பதாகை வைக்கப்பட்டிருந்தது.அந்தப் பதாகையில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராஜபக்ஷ ஈனப் பிறவி’ என எழுதப்பட்டு அவரது புகைப்படத்தின் மீது செருப்புகளால் செய்யப்பட்ட மாலையும் தொங்கவிடப்பட்டிருந்தது. நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் இந்தப் பதாகை அமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்நிலையில், குறித்த பதாகையின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன், பதாகையை கிழித்தெடுத்து, தனது காரில் எடுத்து…
மேலும் படிக்க