அண்மை செய்தி தாயகச் செய்தி 

தேசிய வீட்டுத்திட்டம் 2026; கிளிநொச்சியில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட 3 புதிய வீடுகள்

தேசிய வீட்டுத்திட்டம் 2026;கிளிநொச்சியில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட 3 புதிய வீடுகள் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர் டி.பி.சரத் நேற்று (16) கிளிநொச்சி மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 3 புதிய வீடுகள் பிரதியமைச்சர் T. B. சரத்தினால் சம்பிரதாய பூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இளங்குமரன் ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த வீடு, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. போரின் பாதிப்பு,குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் வீடுகளை நிர்மாணிக்கும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு

வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கானகாசோலை வழங்கும் நிகழ்வு 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (16) பி. ப. 3.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா பங்குபற்றினார்கள். இந் நிகழ்வில் அரசாங்க அதிபரின் தலையுரையினைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனின் கருத்துரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத்தினால் சிறப்புரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் பட்டா வாகனத்தில் லொறி மோதி விபத்து; இருவர் பலி

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின்  வவுனியா – பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோதிய பின்னர் குறித்த லொறி பட்டா வாகனத்தின் மீது கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும்- பள்ளிவாசல்கள் அமையம்!

மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமைய செயற்பாட்டாளர்   எம்.ஐ.எம். முஹர்ரப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகர சபையை வலியுறுத்தி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை செவ்வாய்க்கிழமை(16) இரவு  மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமையத்தின் செயற்பாட்டாளர்களான   பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல் மற்றும்  சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆகியோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதன் போது   கருத்து தெரிவிக்கையில் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.இதைப் பெறுவது எமது தார்மீக உரிமையாகும். எங்களிடம் நிர்வாக ஆளணிகள் உள்ளன.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வவுனியா தாதியர் கல்லூரியில் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் இன்று குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக  ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பதிவுகள் மேற்கொள்ளும் போது கற்கை நெறி முடிவில் அங்கிகாரமுள்ள சான்றிதழான TVEC வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகிகளால் மாணவர்களுக்கு  கூறப்பட்டுள்ளது. எனினும் கற்கை நெறிமுடிவடைந்து நீண்ட நாட்களாகியும் அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என மாணவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து கல்லூரியின் நிர்வாகிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் இன்று குறித்த வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது உடனடியாக எமக்கு சான்றிதழ் வழங்கப்படவேண்டும் இல்லாவிடில் நாம் செலுத்திய பணத்தை திரும்ப செலுத்துமாறு மாணவர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பு பாண்டியன்வீதி பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்;

புதுக்குடியிருப்பு பாண்டியன்வீதி பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நிலமைகளை நேரடியாகப் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பாண்டியன்வீதி பாலத்தை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த பாலம் அமைக்கும் பணியை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 16.06.2026இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் அருகிலிருந்த பாண்டியன் வீதிப் பாலம் கடந்த தித்வா பேரிடர் காலத்தில் உடைப்பெடுத்திருந்தது.குறித்த பாலம் உடைப்பெடுத்ததால் பாண்டியன் வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 03.11.2025 அன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டதுடன், உடைப்பெடுத்த குறித்த பாலத்தைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

செல்வம் பொறுப்பில் இருக்கும் வரை ரெலோவை புறக் கணியுங்கள் – வியஜபவானந்தா எதிர்ப்பு

கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா தமிழ் மக்களிடம் கேட்டுள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா இன்றையதினம் யாழில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார்.இதன்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – சில சில்லறைகளின் சில்லறைத்தனமான செயற்பாடுகளால் இனவிடுதலைக்காக போராடிய பெரும் அமைப்பு சீரழிந்துவிட்டது. குறிப்பாக பாலியல் வியாபாரியான இன்றைய ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளே கட்சி நலிவடைந்து போக பிரதான காரணமாகின்றது. கட்சியின் மூத்த உறுப்பினர் ஜெயராம் சுரேஸ் கொலையிலும் செல்வத்தின் செயற்பாடுகள் உள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. அது மட்டுமல்லாது அதற்கான சான்றுகளும் வலுவாக இருக்கின்றது. பாலியல் விவகாரத்தில் சிக்குண்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.ரெலோவின் 12வது தேசியமாநாடு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது இயக்கத்தின் புதியநிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக கோவிந்தம் கருணாகரன்(ஜனா) வும், உபதலைவராக சுரேன்குருசாமியும்,நிதிச்செயலாளராக க.விஜிந்தன்,நிர்வாகசெயலாளராக நித்தியானந்தனும்,இளைஞரணி செயலாளராக பிரபாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து தலைமைக்குழு,மற்றும் மத்தியகுழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலிட்டி மக்களின் பிரதான கோரிக்கைகள் – ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று  வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும்  போராட்டங்களை முன்னெடுத்தனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பிள்ளையானுடன் தொடர்புடைய 5 கொலைகள் தொடர்பான அறிக்கை

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ) கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசியத் தகவல்களைக் தகவல்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.இந்த விபரங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின்படி, இந்த 5 கொலைகளும் மட்டக்களப்பு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன: கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை. பிள்ளையான் குழுவினரால் கோரப்பட்ட கப்பப் பணத்தை (Extortion) வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை.  TMVP அமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிள்ளையானின் சொந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களே…

மேலும் படிக்க