தொடர்பணியில் ஏர் நிலம்..ஆழ்துளைக் கிணறு அமைப்பு.
தொடர்பணியில் ஏர் நிலம்..
05.06.2016இல் இறைபதமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு நாள் 05.06.2026 ஆகும்..
இவ் நாளில் அவரது ஆன்மா சாந்திபெற இறைவணை வேண்டுவதோடு நினைவுகளால் வணங்குகின்றோம்.
இறைபமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தாயகம் மன்னார் முத்தரிப்புத்துறை 70 குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்தி செய்யுமுகமாக ஆழ்துளைக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதோடு சிறப்புணவு வழங்கி ஆன்ம சாந்தி பிரார்தனையும் நடைபெற்று பயன்தரு மரக்கன்றும் நடுகை செய்யப்பட்டது…
இச் செயற்திட்டத்திற்கு அவரது சுவிற்சர்லாந்து வாழ் மகள் திருமதி ராதிகா கஜேந்திரன் அவர்கள் 3,24,000/= நிதியினை வழங்கியிருந்தார்.
இவ் நிதியுதவி நல்கிய குடும்பத்தினர்கும் இப் பணியை நிறைவாக்கிய “ஏர் நிலம்” தொண்டமைபின் இணைப்பாளர் கவிஞர் மன்னார் பெனில், நிர்வாக இயக்குனர் திரு.தனம் நித்தி ஆகியோருக்கும் பயன் பெற்ற மக்கள் சார்பான நன்றி…
பணி ஏற்பாடு:-
து.திலக்(கிரி),
-ஏர் நிலம் தொண்டமைப்பு-
06.06.2026.

