தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஜெயபுரம் பகுதியில் நிரந்தரமான நீதிமன்றம் அமைப்பதற்கு சுமார் மூன்று ஏக்கர் காணி

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகர பகுதியிலேயே நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. இதனால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் மற்றும் ஜெயபுரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வருவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டில் இருந்து குறித்த பகுதியில் நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதற்கு பிரதேச செயலகத்தினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் ஜெயபுரம் பகுதியில் நிரந்தரமான நீதிமன்றம் அமைப்பதற்கு சுமார் மூன்று ஏக்கர் காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அடையாளப்படுத்தப்பட்ட காணி வன வள பகுதியினரின் ஆளுகைக்கு உட்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால், குறித்த காணியினை நீதிமன்றம் அமைப்பதற்கு பெற்றுக் கொள்வது தொடர்பான ஒன்றிணைந்த கூட்டுக்களவிஜயம்
நேற்றைய தினம் (15.06.2026) இடம்பெற்றது.இக்களவிஜயத்தில் கெளரவ மேல் நீதிமன்ற நீதிபதி, கெளரவ மாவட்ட நீதிமன்ற நீதிபதி, பிரதேச செயலாளர், மாவட்ட வன வள அதிகாரி, பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன்போது குறித்த காணி நேரடியாக பார்வையிடப்பட்டு காணியினை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

அன்மைச் செய்தி

Leave a Comment