புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம்
புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம்
யாழ்ப்பாணம், நெடுங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய, பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த சிப்பாய் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்கு வந்த அவரிடம், நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதமை தொடர்பில் கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் முகாமிலிருந்து வெளியேறிய அவர், அரியாலை – நெடுங்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

