அண்மை செய்தி இலங்கை செய்தி. 

2025 O/L தேர்வு முடிவுகள் வெளியீடு – 2,25,748 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகளின்படி, 2,25,748 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருடத் தேர்வில் 11,790 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்று சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 11,651 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாகவும், 139 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களாகவும் உள்ளனர். அதேவேளை, 7,419 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூன் 25 முதல் ஜூலை 08 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 O/L தேர்வு முடிவுகள் நேற்று (19) நள்ளிரவில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

‘ஐஸ்’ போதைப் பொருள் கடத்தல்.! ஒருவர் கைது

கடவத்தையில் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சிறப்பு சுற்றிவளைப்பில் பெருமளவிலான ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) கடவத்தை, புனித அந்திரேயா அக்வில்லினோ தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியொன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையில் சுமார் 6 கிலோ 288 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சந்தை பெறுமதி 10 கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், கணேமுல்ல, கேந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் ‘பொடி சுரேஷ்’ மற்றும் ‘சங்க சமீர’ ஆகியோரின் இலங்கை வலையமைப்பை இயக்கும் முக்கிய நபராக செயல்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் எடைபோட பயன்படுத்தப்பட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

போதைப் பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பெருமளவிலான போதைப்பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.அவரிடமிருந்து சுமார் 37 கிலோகிராம் எடையுடைய ஹஷீஷ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் பெறுமதி சுமார் 377 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக போதைப்பொருளை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் சந்தேகநபரும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் சந்தேக நபர் கைது

சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட காணொளி தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர். மதவாச்சி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அதன் உரிமையாளரைத் தாக்கும் காணொளி ஒன்று சமீப நாட்களாக சமூக மற்றும் மின்னணு ஊடகங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து, 10 ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு ஒன்றினைச் செய்திருந்தார். இந்தக் காணொளிகள் குறித்து மதவாச்சி பொலிஸார் நடத்திய விசாரணையின் போது தாக்குதல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை 17ஆம் திகதி புதன்கிழமை மாலை மதவாச்சி பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவினரால் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் .சம்பந்தப்பட்ட தாக்குதலில் சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதம் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம்

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம் யாழ்ப்பாணம், நெடுங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய, பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த சிப்பாய் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்கு வந்த அவரிடம், நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதமை தொடர்பில் கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் முகாமிலிருந்து வெளியேறிய அவர், அரியாலை – நெடுங்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மானிப்பாய் காணி விவகாரம்: அப்பாவி மக்களை பலிகடாவாக்க வேண்டாம்!

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி தொடர்பாக சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான செய்திகளால் தாம் மற்றும் தமது குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர், இன்றைய காலச் சூழலில் ஊடகங்களின் விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றாலும், உண்மைக்குப் புறம்பான செய்திகளின் தாக்கம் அப்பாவி மக்களையும் அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதிப்பதாகத் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பகுதியில் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டதாகவும்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தொடர்பணியில் ஏர் நிலம்..ஆழ்துளைக் கிணறு அமைப்பு.

தொடர்பணியில் ஏர் நிலம்.. 05.06.2016இல் இறைபதமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு நாள் 05.06.2026 ஆகும்.. இவ் நாளில் அவரது ஆன்மா சாந்திபெற இறைவணை வேண்டுவதோடு நினைவுகளால் வணங்குகின்றோம். இறைபமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தாயகம் மன்னார் முத்தரிப்புத்துறை 70 குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்தி செய்யுமுகமாக ஆழ்துளைக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதோடு சிறப்புணவு வழங்கி ஆன்ம சாந்தி பிரார்தனையும் நடைபெற்று பயன்தரு மரக்கன்றும் நடுகை செய்யப்பட்டது… இச் செயற்திட்டத்திற்கு அவரது சுவிற்சர்லாந்து வாழ் மகள் திருமதி ராதிகா கஜேந்திரன் அவர்கள் 3,24,000/= நிதியினை வழங்கியிருந்தார். இவ் நிதியுதவி நல்கிய குடும்பத்தினர்கும் இப் பணியை நிறைவாக்கிய “ஏர் நிலம்” தொண்டமைபின் இணைப்பாளர் கவிஞர் மன்னார் பெனில், நிர்வாக இயக்குனர் திரு.தனம் நித்தி ஆகியோருக்கும் பயன்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடி யேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த கிராமங்களை மீள்குடியேற்றம்செய்வது தொடர்பில் விசேட கூட்டங்களை ஏற்பாடுசெய்யுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இகியோருக்கு இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026இன்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் ஆண்டான்குளம் கிராமமும்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு புதிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம்

பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு புதிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவின் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளராக தெரிவு செய்யப்பட்ட திருமதி கஜதீபன் விதுஜா அவர்கள், 2026.06.01 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. S. முரளிதரன் அவர்களிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இந்நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் மாவட்ட காணி பதிவாளரும் கலந்துகொண்டார். பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு நீண்டகாலமாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமிக்கப்படாத நிலையில், பல்லவராயன்கட்டு மேற்கு பிரிவின் பதிவாளரே பதில் கடமையாற்றி வந்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கென தனியான பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளதால், அப்பிரதேச மக்கள் தங்களது பிறப்பு, இறப்பு…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தேசிய வீட்டுத்திட்டம் 2026; கிளிநொச்சியில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட 3 புதிய வீடுகள்

தேசிய வீட்டுத்திட்டம் 2026;கிளிநொச்சியில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட 3 புதிய வீடுகள் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர் டி.பி.சரத் நேற்று (16) கிளிநொச்சி மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 3 புதிய வீடுகள் பிரதியமைச்சர் T. B. சரத்தினால் சம்பிரதாய பூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இளங்குமரன் ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த வீடு, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. போரின் பாதிப்பு,குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் வீடுகளை நிர்மாணிக்கும்…

மேலும் படிக்க