அண்மை செய்தி தாயகச் செய்தி 

வவுனியா தாதியர் கல்லூரியில் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் இன்று குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக  ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பதிவுகள் மேற்கொள்ளும் போது கற்கை நெறி முடிவில் அங்கிகாரமுள்ள சான்றிதழான TVEC வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகிகளால் மாணவர்களுக்கு  கூறப்பட்டுள்ளது. எனினும் கற்கை நெறிமுடிவடைந்து நீண்ட நாட்களாகியும் அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என மாணவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து கல்லூரியின் நிர்வாகிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் இன்று குறித்த வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது உடனடியாக எமக்கு சான்றிதழ் வழங்கப்படவேண்டும் இல்லாவிடில் நாம் செலுத்திய பணத்தை திரும்ப செலுத்துமாறு மாணவர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பு பாண்டியன்வீதி பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்;

புதுக்குடியிருப்பு பாண்டியன்வீதி பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நிலமைகளை நேரடியாகப் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பாண்டியன்வீதி பாலத்தை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த பாலம் அமைக்கும் பணியை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 16.06.2026இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் அருகிலிருந்த பாண்டியன் வீதிப் பாலம் கடந்த தித்வா பேரிடர் காலத்தில் உடைப்பெடுத்திருந்தது.குறித்த பாலம் உடைப்பெடுத்ததால் பாண்டியன் வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 03.11.2025 அன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டதுடன், உடைப்பெடுத்த குறித்த பாலத்தைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.ரெலோவின் 12வது தேசியமாநாடு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது இயக்கத்தின் புதியநிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக கோவிந்தம் கருணாகரன்(ஜனா) வும், உபதலைவராக சுரேன்குருசாமியும்,நிதிச்செயலாளராக க.விஜிந்தன்,நிர்வாகசெயலாளராக நித்தியானந்தனும்,இளைஞரணி செயலாளராக பிரபாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து தலைமைக்குழு,மற்றும் மத்தியகுழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது

யாழ்ப்பாணம் – வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊர்காவற்றுறை பொலிசார் திருட்டில் ஈடுபடுவோர் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலணை பிரதேசத்தை நீண்ட நாள்களாக அச்சுறுத்தி வந்த மாடு கடத்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை  குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர் வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில், நீண்டகாலமாக பண்ணையாளர்களின் பெறுமதிமிக்க கறவை மாடுகள் மற்றும் வீடுகளை உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடிவந்த குழுவே கடந்த இரு நாள்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த நிலையில், பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை, பருத்தியடைப்பு ஆகிய பகுதிகளில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ரூ.2 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சாவுடன் இளைஞர் கைது!

ரத்மலானா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரின் உடைமைகளில் இருந்து 3 கிலோகிராம் மற்றும் 125 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன்

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன் எம்.பி கோரிக்கை; கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்கிறார் –  அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த கோரிக்கையை உரியவகையில் பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 09.06.2026இன்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும். அன்றைய தினம் பரீட்சைக்கான நேர அட்டவணை பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: இரண்டாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை. முதலாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை.இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவற்றுக்கான விரிவான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளமை…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன்

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து விஜயரத்தினம் சரவணன் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்த வேலைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைத்தவுடன் பாடசாலைகளின் திருத்த வேலைகள் விரைவாக அரம்பிக்கப்படுமெனவும் வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தித்வா புயலினால் முல்லைத்தீவு கல்விவலயத்தில் 32பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகளிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது. அதில் 09பாடசாலைகளின் திருத்த வேலைகள் 2025இல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இந்த ஆண்டில் 15பாடசாலைகள் திருத்த வேலைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தன. அதாவது சிறு திருத்த வேலைகளுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அந்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சொல்லிசை பாடகரை சிறையில்சந்தித்த சிறிதரன்

சொல்லிசை பாடகரை சிறையில்சந்தித்த சிறிதரன் எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார். குறித்த பாடகரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள சிறிதரன் இன்று (08), பாடகரை சிறைச்சாலையில் சந்தித்து , நம்பிக்கையூட்டியுள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன்

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மூன்று மாதத்திற்கு பிற்பாடு காணியை விடுவிக்க இணங்கிய பொலிஸார் முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக  விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து குறித்த காணியை விடுவிப்பதற்கு பொலிசார் மூன்றுமாத காலஅவகாசம் கோரியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள காணியை எப்போது விடுவிக்கப்போகின்றீர்கள். அந்தக்காணி மு.நாகம்மா என்பவருக்குரிய ஒரு தனியார் காணியாகும். குறித்த காணி விடுவிப்புத் தொடர்பாக மாகாணசபைக் காலத்திலும் வலியுறுத்தியிருக்கின்றேன். இருப்பினும் இதுவரை குறித்த காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அந்தக்காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்கள்…

மேலும் படிக்க