சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் சந்தேக நபர் கைது
சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட காணொளி தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதவாச்சி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அதன் உரிமையாளரைத் தாக்கும் காணொளி ஒன்று சமீப நாட்களாக சமூக மற்றும் மின்னணு ஊடகங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து, 10 ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு ஒன்றினைச் செய்திருந்தார்.
இந்தக் காணொளிகள் குறித்து மதவாச்சி பொலிஸார் நடத்திய விசாரணையின் போது தாக்குதல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை 17ஆம் திகதி புதன்கிழமை மாலை மதவாச்சி பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவினரால் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் .சம்பந்தப்பட்ட தாக்குதலில் சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதம் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதுடன்

