தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன்
தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து விஜயரத்தினம் சரவணன் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்த வேலைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைத்தவுடன் பாடசாலைகளின் திருத்த வேலைகள் விரைவாக அரம்பிக்கப்படுமெனவும் வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தித்வா புயலினால் முல்லைத்தீவு கல்விவலயத்தில் 32பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகளிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது. அதில் 09பாடசாலைகளின் திருத்த வேலைகள் 2025இல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இந்த ஆண்டில் 15பாடசாலைகள் திருத்த வேலைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தன. அதாவது சிறு திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அந்த…
மேலும் படிக்க