சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில்  இரண்டாம் நாளாக  இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணி  நேற்று திங்கட்கிழமை (30.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அகழ்வுப் பணி இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமையும்(31.03.2026) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.அகழ்வு இடம்பெறும் அவ்விடத்தில் இதுவரையில் எதுவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அன்மைச் செய்தி

Leave a Comment