மத்திய கிழக்கு போரில் கொல்ல ப்பட்ட அமெரிக்க தமிழ் இராணுவ வீரர்
மத்திய கிழக்கு போரில் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்ற தமிழ் இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளார். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது.இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இவருடைய இறுதி கிரியைகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United States என்ற முகவரியில் அமைந்துள்ள Los Angels National Cemetory யில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க இராணுவ வீரர்களால் இறுதி இராணுவ மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட முதல் தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

