அண்மை செய்தி தாயகச் செய்தி 

தந்தை செல்வநாயகத்தின் 128 ஆவது ஜனன தினம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 128 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று (31)மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தது

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர மேயர் க. செல்வராசா (சுப்ரா), உப்பு வெளி பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ், தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் வி. விஜய குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

இதேவேளை,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் பிறந்தநாள் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

அன்மைச் செய்தி

Leave a Comment