அண்மை செய்தி தாயகச் செய்தி 

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை;

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வவுணதீவு பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த. டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து கரையாக்கன்தீவு வாவிக்கரையோரப் பகுதியில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அங்கிருந்த கசிப்பு போத்தல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்கா விமான படைத் தளம்மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்ட நாள்

24.7.2001ம் ஆண்டு கட்டுநாயக்கா விமான படைத் தளம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரகாவியமான 14கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்   தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது தரைகரும் புலிகள் சென்று தாக்குதல் நடத்தி வீர வரலாறு படைத்து விடுதலை போராட்டத்திற்கு திருப்பு முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாள். தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களையும் வெற்றி தாக்குதல்களையும் நினைவிற்கொண்டு புலிகளின் வீரத்தினையும் வரலாற்றினையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. கட்டுநாயக்காவில் குண்டுகளை ஏற்றி தமிழர் வாழ் இடங்கள் மீது வீசி தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களத்தின் வான் கழுகுகளை அவர்கள் வாழ்கின்ற குகைக்கு சென்று அழித்த க*ரு*ம்*பு*லி மறவர்களின் வீரத்தினை அவர்களின் வரலாற்றினை இன்று நினைவு கொள்ள…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான நேற்று (23)07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனு. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து தட்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் ரயில் பாதைகள் பல இடங்களில் சேதமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. பாதை புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அண்மையில் வெற்றிகரமான சோதனை ஓட்டம் (வெள்ளோட்டம்) நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பயணிகள் சேவையை மீள ஆரம்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.50 மணிக்கு தலைமன்னார் நோக்கி ரயில் புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா சூறாவளிக்குப் பின்னர் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டதால், மன்னார் மாவட்ட மக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில், ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மன்னார் மக்களுகளின் நீண்ட தூரப் பயணத் தேவைகளை…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது; ரவிகரன்

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது; ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு அரண் ஆகுதலே இத்தீவின் நல்லிணக்கம் – ரவிகரன் எம்.பி இடித்துரைப்பு இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல் உயரும்போதெல்லாம் அரச இயந்திரங்களின் துணையோடு தமிழர்கள்மீதான அடக்குமுறைகள் இனக்கலவரங்களாகத் தொடர்ந்ததாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாலேயே தமிழர்கள் சமஷ்டியையும், தனி ஈழத்தையும் கோரவேண்டியநிலை ஏற்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே ஆட்சியாளர்கள், இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகமான ஈழத் தமிழர்களுக்கு அரணாகுவதால் மாத்திரமே இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்துகாணால் ஆக்கப்பட்டோர் விவகாரம், முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை, புதைகுழிகள் விவகாரம், நினைவேந்தல் உரிமை உள்ளிட்ட தமிழர்கள் நீதிகோரும் விடயங்களுக்கு ஆதரவாக ஆட்சியாளர்களும் குரல் கொடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலை தொடர்பாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட ங்கள்; சுற்றுலா அமைச்சின் விசேட தலையீடு ரவிகரன்

சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள்; சுற்றுலா அமைச்சின் விசேட தலையீடு தேவை என – ரவிகரன் எம்.பி வலியுறுத்து சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு சுற்றுலா அமைச்சு விசேட தலையீட்டை மேற்கொள்ளவேண்டுமென சுற்றுலா பிரதி அமைச்சரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்த சுற்றுலா பிரதிஅமைச்சர் ருவன் ரணசிங்க, முல்லைத்தீவு மாவட்டத்தில் 76சுற்றுலா மையங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அதில் 10சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் 23.07.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை சுற்றுலா அதிகார சபையால் 2025 மே…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளியில் 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கல்லாறு பகுதியில் 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற  இரகசியத் தகவலின் அடிப்படையில் கல்லாறு  கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11:45 மணியளவில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் பொலிஸார்  மீட்டனர். அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும்  சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம்  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட  கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

A/L பரீட்சை ஒத்திவைப்பு கோரிக்கை தள்ளுபடி!

2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனுவை (Writ Petition) மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட நீண்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது. தமது முதலாவது மற்றும் இரண்டாவது தடவைகளுக்காக 2026 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு சில மாணவர்களினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதிய கால அவகாசம் கோரி அவர்கள் இந்த சட்ட நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும், நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின்படி திட்டமிட்டவாறு அடுத்த மாதமே பரீட்சை நடைபெறும் என்பது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

குருதிப் பரிசோதனைக்கு அதிக கட்டணம்; யாழ். வைத்தியசாலைக்கு ரூ. 3 மில். அபராதம்

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, இரத்தப் பரிசோதனைக்காக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தமை தொடர்பில் ரூ. 30 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு (CAA) கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டு, இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை இரத்தப் பரிசோதனைக்காக (FBC) நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச கட்டணமான ரூ. 400 இற்கு பதிலாக ரூ. 550 அறவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை 13ஆம் திகதியன்று இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அவ்வைத்தியசாலையில் சோதனை நடத்தியதோடு, இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியசாலை நிர்வாகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றினால்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறிச் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் நேற்று புதன்கிழமை மாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது இரணைதீவுக்குத் தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க