கட்டுநாயக்கா விமான படைத் தளம்மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்ட நாள்
24.7.2001ம் ஆண்டு கட்டுநாயக்கா விமான படைத் தளம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரகாவியமான 14கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது தரைகரும் புலிகள் சென்று தாக்குதல் நடத்தி வீர வரலாறு படைத்து விடுதலை போராட்டத்திற்கு திருப்பு முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாள்.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களையும் வெற்றி தாக்குதல்களையும் நினைவிற்கொண்டு புலிகளின் வீரத்தினையும் வரலாற்றினையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது.
கட்டுநாயக்காவில் குண்டுகளை ஏற்றி தமிழர் வாழ் இடங்கள் மீது வீசி தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களத்தின் வான் கழுகுகளை அவர்கள் வாழ்கின்ற குகைக்கு சென்று அழித்த க*ரு*ம்*பு*லி மறவர்களின் வீரத்தினை அவர்களின் வரலாற்றினை இன்று நினைவு கொள்ள வேண்டிய தினமாகும். தமிழீழத் தே*யத்தலைவர் அவர்களின் மதிநுட்பத்தின் வெளிப்பாடாக இந்த கட்டுநாயக்கா வான் படைத்தளத்தினை தகர்த்து சிறீலங்கா அரசிற்கும் படையினருக்கும் பாரிய இழப்பினை கொடுத்தார்கள்.
கட்டுநாயக்கா தாக்குதலில் சிறீலங்கா அரசின் விமானங்கள் 28 அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட இத்தாக்குதலானது சிறீலங்காவின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான இலங்கை அரசின் சொத்துக்கள் அழிக்கப்பட்டது.
இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் தலைவர் வே*லு*ப்*பிள்ளை பி*ர*பா*க*ர*ன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.
2001 ஜூலை 23 திங்கட்கிழமை இரவு 8.30 க்கு 14 க*ரு*ம்*பு*லி*க*ள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.
2001 ஜூலை 23 திங்கட்கிழமை இரவு 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.
2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.
2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.
2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.
தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் :
இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது. விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது. சார்பற்ற அறிக்கை 26 வானூர்திகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன என்று கூறுகின்றது.
முற்றிலுமாக அழிக்கப்பட்டவை :
இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஐ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஐ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஐ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை :
இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஐ (MI) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்
தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.
இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

