வண்ணான்கேணி வடக்கில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி தவிப்பு
கிளிநொச்சி மாவட்டம், வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து, கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் கிராம மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “எமது கிராமத்தில் வாழ்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்குவதற்கு சொந்தக் காணி இல்லாத நிலையில், உறவினர்களின் வீடுகளிலும், மற்றவர்களின் காணிகளிலும் தற்காலிகமாக தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு அசௌகரியங்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில், எமது கிராமத்தின் பின்புறமாக அமைந்துள்ள அரசின் ஒதுக்கீட்டுக் காப்புக் காணிகளை, பிரதேச செயலகத்தின் ஊடாக பொதுப் பயன்பாட்டுக்காக (வெகுசமூகத்திற்காக) வழங்குவதற்கு…
மேலும் படிக்க