குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது
விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகள், எவ்வித மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் நேற்று (02) தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உடல்களைத் தேடி, களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் நேரடி மேற்பார்வையில் கடந்த மார்ச் 30, 2026 அன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையில் தற்செயலாக எலும்புகள் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு பாரிய புதைகுழி இருப்பதாகக் கருதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 01 வரை மூன்று நாட்கள் அகழ்வுப்…
மேலும் படிக்க