இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடு தழுவிய அடை யாள வேலை நிறுத்தம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முடிவு, இன்று நடைபெறவுள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார்.

வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரம் ஏற்கெனவே இரண்டு முறை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment