மயிலிட்டி மக்களின் பிரதான கோரிக்கைகள் – ஆளுநரிடம் மனு கையளிப்பு
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.…
மேலும் படிக்க